search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் மேலும் பதக்க வாய்ப்பு
    X

    ஆசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் மேலும் பதக்க வாய்ப்பு

    ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் மேலும் பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsianGames2018

    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய 11-வது நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது. டிரிபிள் ஜம்பில் அர்பிந்தர்சிங்கும், ஹெப்படத்லானில் சுவப்ன பர்மனும் தங்கம் வென்றனர். 200 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்த் வெள்ளியும் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையில் தமிழக வீரர் சரத்கமல்-மனிகா பத்ரா ஜோடிக்கு வெண்கலமும் கிடைத்தது.

    நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 54 பதக்கம் பெற்றுள்ளது.

    தடகள போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இதில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்களுக்கான வட்டு எறிதல் பந்தயம் இந்திய நேரப்படி இன்று மாலை 5.10 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் சீமாபுனியா, குமாரி சந்தீப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இருவரும் பதக்கம் பெற்று தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சீமா புனியா கடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று இருந்தார். காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றுக் கொடுத்தார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் 5.50 மணிக்கும், ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் 6.05 மணிக்கும் நடக்கிறது. இந்தியா சார்பில் சித்ரா உன்னிகிருஷ்ணன் மோனிகா சவுத்ரி மற்றும் மஞ்ஜித்சிங், ஜின்சன் ஜான்சன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்

    மஞ்சித்சிங் தகுதி சுற்றில் முதலிடமும், ஜின்சன் 2-வது இடமும் பிடித்தனர். இதனால் இருவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இருவரும் 800 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் (தங்கம், வெள்ளி) பெற்றுக் கொடுத்து இருந்தனர்.

    5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் கோவிந்த் கலந்து கொள்கிறார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அவர் வெண்கல பதக்கம் பெற வேண்டியது. விதி முறை மீறலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதக்கம் பறிபோனது. இதனால் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலாவது பதக்கம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் 6.50 மணிக்கும், ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் இரவு 7.15 மணிக்கும் நடக்கிறது. இந்த இரண்டிலும் இந்திய அணி பங்கேற்கிறது. தொடர் ஓட்டத்திலும் பதக் கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தட களத்தில் இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி ஆக மொததம் 14 பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018

    Next Story
    ×