search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிமுக டெஸ்டில் 2-வது பந்திலேயே சிக்ஸ் விளாசியது எப்படி?- ரிஷப் பந்த் பதில்
    X

    அறிமுக டெஸ்டில் 2-வது பந்திலேயே சிக்ஸ் விளாசியது எப்படி?- ரிஷப் பந்த் பதில்

    அறிமுக டெஸ்டின் 2-வது பந்திலேயே சிக்ஸ் அடித்தது எப்படி என்பதற்கு இளம் விக்கெட் கீப்பரான ரஷிப் பந்த் விளக்கம் அளித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. முதல் இரண்டு டெஸ்டிலும் தினேஷ் கார்த்திக் சரியாக விளையாடாததால் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார்.

    20 வயதாகும் ரிஷப் பந்திற்கு இதுதான் அறிமுக டெஸ்ட் ஆகும். இவர் களம் இறங்கும்போது சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் பந்து வீசினார். முதல் பந்தை தடுத்தாடிய ரிஷப் பந்த் 2-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிக்சரோடு ரன் கணக்கை துவக்கிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். முதல் இன்னிங்சில் 24 ரன்களும், 2--வது இன்னிங்சில் 1 ரன்களும் அடித்தாலும், 7 கேட்ச் பிடித்து அசத்தினார்.



    இந்நிலையில் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கியது எப்படி என்பது குறித்து ரிஷப் பந்த் விளக்கியுள்ளார். இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘நான் கொஞ்சம் பற்றமாகத்தான் இருந்தேன். முதல் போட்டியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. நான் எதையும் செய்வதற்கு யோசித்து கொண்டிருக்க மாட்டேன். நான் பந்தை பார்த்தேன். அதற்கு ஏற்றபடி செயல்பட்டேன். அவ்வளவுதான்.

    இங்கிலாந்தில் எப்போதுமே கீப்பிங் செய்வதற்கு மிகக்கடினம். ஏனென்றால் பந்து ஸ்விங் ஆவதால் பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் அங்குமிங்கும் தள்ளாடியபடியே வரும். கடந்த இரண்டரை மாதங்களாக இங்கிலாந்தில் இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடியதால், அது எனக்கு உதவியாக இருந்தது.



    பும்ரா பந்து வீசும்போது, மாறுபட்ட கை ஆக்சனோடு பந்து வீசுவார். ஆகவே, சில நேரங்களில் அவரது பந்து வீச்சிற்கு ஏற்ப இடது சைடு மூவ் ஆக வேண்டும். ஜோஸ் பட்லருக்கு எட்ஜ் ஆகும் போது நான் அதிக அளவில் லெக் சைடு மூவ் செய்து விட்டேன்.

     அது ஒன்றும் கடினமாக கேட்ச் அல்ல. அதை நான் பிடித்திருக்கனும். ஆனால், கேட்ச் மிஸ் ஆவது கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான். ஒரு விக்கெட் கீப்பராக அவுட் சைடு எட்ஜ் பந்திற்காக காத்திருக்க வேண்டும். அதில் இருந்து நான் கற்றது இதுதான்’’ என்றார்.
    Next Story
    ×