என் மலர்

  செய்திகள்

  டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- 23-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி
  X

  டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- 23-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரென்ட் பிரிட்ஜ் 2-வது இன்னிங்சில் சதம் அடித்து சர்வதேச போட்டியில் 23-வது சதத்தை பதிவு செய்துள்ளார் விராட் கோலி #ViratKohli #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் 97 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

  அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. பின்னர் 169 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 82 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்த விராட் கோலி, 191 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார்.  இந்த தொடரில் விராட் கோலியின் 2-வது சதம் இதுவாகும். அத்துடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 23-வது சதத்தை பதிவு செய்துள்ளார். அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சேவாக் உடன் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 51 சதங்களுடன் முதல் இடத்திலும், 36 சதங்களுடன் ராகுல் டிராவிட் 2-வது இடத்திலும், 34 சதங்களுடன் கவாஸ்கர் 3-வது இடத்திலும் உள்ளனர்.
  Next Story
  ×