search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு
    X

    இரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய தொடக்க ஜோடியான தவான் - லோகேஷ் ராகுல் இரண்டு இன்னிங்சிலும் 60 ரன்கள் சேர்த்தது அரிய நிகழ்வாகும். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங்கிற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும்.

    இதனால் தொடக்க ஜோடியான ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது பந்து வீச்சை எப்படி தாக்குப்பிடிப்பார்கள்? என்ற பயம் இருந்தது. ஆனால் இருவரும் 18.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 60 ரன்கள் சேர்த்தனர்.

    சுமார் 19 ஓவர் தாக்குப் பிடித்ததால் அதன்பின் வந்த ரகானே, விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா 329 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 23 ரன்களும் சேர்த்தனர்.

    அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. 168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்த இன்னிங்சிலும் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இந்த இன்னிங்சிலும் இருவரும் 11.2 ஓவர்கள் தாக்குப்பிடித்து முதல் விக்கெட்டுக்கு சரியாக 60 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் இரண்டு இன்னிங்சிலும் தொடக்க தவான் - லோகுஷ் ராகுல் ஜோடி ஒரே ரன்கள் எடுத்த அரிய நிகழ்வு நடைபெற்றது. 2-வது இன்னிங்சில்  தவான் 44 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்களும் சேர்த்தனர்.



    இதற்கு முன் இந்த அரிய நிகழ்வு இரண்டு முறை நடந்துள்ளது. 2008-ம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கல்லீஸ் - ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி முதல் இன்னிங்சிலும், 2-வது இன்னிங்சிலும் தலா 124 ரன்கள் சேர்த்திருந்தது.

    2009-ம் ஆண்டு சிட்னியில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஹெய்டன், காடிச் ஆகியோர் இரண்டு இன்னிங்சிலும் 62 ரன்கள் எடுத்திருந்தனர். அதன்பின் தற்போது தவான் - லோகேஷ் ராகுல் ஜோடி 60 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×