search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்
    X

    ஆசிய விளையாட்டு போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முதல் தங்கம் பதக்கத்தை வென்றுள்ளார். #AsiansGames2018
    ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை எதிர்கொண்டார். 11-8 என ஜப்பான் வீரரை வீழ்த்தி பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா ஆசியக் கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.



    முதலில் பஜ்ரங் புனியா 6-4 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 6-6 என சமநிலைப் பெற்றார். பின்னர் 8-6 என முன்னிலைப் பெற்று இறுதியில் 11-8 என வெற்றி பெற்றார்.

    சுஷில் குமார், மயுசம் காத்ரி, சந்தீப் தோமர் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்தது. அவர்களை வீழ்த்தியவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறாததால் பதக்கத்திற்கான வாய்ப்பை இழந்தனர்.
    Next Story
    ×