search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் டெஸ்ட்- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்து டிக்ளேர்
    X

    லார்ட்ஸ் டெஸ்ட்- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்து டிக்ளேர்

    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் 137 நாட்அவுட். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஆண்டர்சனின் (5) அபார பந்து வீச்சால் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இங்கிலாந்து நேற்றைய 3-வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் (120 நாட்அவுட்), பேர்ஸ்டோவ் (93) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்னுடனும், சாம் குர்ரான் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாம் குர்ரான் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    கிறிஸ் வோக்ஸ் 137 ரன்னுடன் களத்தில் இருந்தார். தற்போது வரை இந்தியா முதல் இன்னிங்சில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    Next Story
    ×