என் மலர்
செய்திகள்

தமிழ்நாடு பிரீமியர் லீக்- மதுரை பாந்தர்ஸ்க்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர் 1-ல் மதுரை பாந்தர்ஸ்க்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் #TNPL2018 #DindigulDragons #MaduraiPanthers
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் களம் இறங்கியது.
தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 9.1 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ஹரி நிஷாந்த் 31 பந்தில் 57 ரன்களும், ஜெகதீசன் 34 பந்தில் 43 ரன்களும் குவித்தனர்.

அதன்பின் வந்த ஆர் விவேக் 25 பந்தில் 54 ரன்கள் குவித்தார். இந்த மூவரின் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்துள்ளது. #TNPL2018 #DindigulDragons #MaduraiPanthers
Next Story






