search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின், இஷாந்த் ஷர்மா பந்தில் இங்கிலாந்து திணறல்- மதிய உணவு இடைவேளை வரை 86/6
    X

    அஸ்வின், இஷாந்த் ஷர்மா பந்தில் இங்கிலாந்து திணறல்- மதிய உணவு இடைவேளை வரை 86/6

    அஸ்வின் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 86 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. #ENGvIND #Ashwin
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தாவித் மலன் ஜென்னிங்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். ஜென்னிங்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் சாய்க்க இங்கிலாந்து 39 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.



    அதன்பின் இஷாந்த் ஷர்மா பந்து வீசினார். இவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. தாவித் மலனை 20 ரன்னில் வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் பேர்ஸ்டோவை 28 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸை 6 ரன்னிலும் ஒரே ஓவரில் வெளியேற்றினார். அப்போது இங்கிலாந்து 30.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    தற்போது வரை இங்கிலாந்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 50 ரன்னுக்குள் இங்கிலாந்தை ஆல்அவுட் ஆக்கிவிட்டால், இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×