search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரீமியர் லீக் - டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி வாரியர்ஸ் வெற்றி
    X

    தமிழ்நாடு பிரீமியர் லீக் - டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி வாரியர்ஸ் வெற்றி

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது. #TNPL2018 #TPvTW
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் எஸ் தினேஷ், கவுசிக் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவுசிக் காந்தி 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எஸ் தினேஷ் 18 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.

    நிதிஷ் ராஜகோபால் 26 பந்தில் 41 ரன்களும், எஸ் அபிஷேக் 27 பந்தில் 30 ரன்களும் அடிக்க ரூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் சோனு யாதவ், குமரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.



    பின்னர், 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியில் பரத் ஷங்கர் மற்றும் மணி பாரதி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். கனேஷ் வீசிய 8-வது ஓவரில் மணி பாரதி 26 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்திருந்த பரத் ஷங்கர், 51 ரன்களில் கனேஷ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் குமார் ரன் அடிக்காமலேயே வந்த வேகத்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா இந்திரஜித்தும், கனபதியும் அதிரடியாக விளையாடினர்.

    இதனால், 19 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்து ரூபி திருச்சி வாரியர்ஸ் வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 50 ரன்கள், கனபதி 27 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டூட்டி பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் கனேஷ் 2 விக்கெட்டுக்களையும், ரங்கராஜன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    சிறப்பாக விளையாடி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட பாபா இந்திரஜித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #TPvTW
    Next Story
    ×