search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் ‘ஸ்விங் கிங்’ புவிக்கு இடமில்லை
    X

    18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் ‘ஸ்விங் கிங்’ புவிக்கு இடமில்லை

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்தியா அணியில் ‘ஸ்விங் மன்னன்’ புவனேஸ்வர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை. #ENGvIND #Bhuvi
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து தொடரின்போது வேகப்பந்து வீச்சில் முதுகெலும்பாக இருப்பார் என்று கருதப்பட்ட ‘ஸ்விங் கிங்’ புவனேஸ்வர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை.

    இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘‘நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகின் அடிப்பாகத்தில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் பிசிசிஐ மெடிக்கல் குழுவால் கவனிக்கப்பட்டு வருகின்றது. இந்திய அணியில் அவருடைய பெயர் விரைவில் இடம்பெறும்’’ என்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.



    இன்னும் 13 நாட்கள் உள்ளதால் புவனேஸ்வர் குமார் முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது. அதேவேளையில் பும்ரா காயத்தில் இருந்து மீண்டால் 2-வது டெஸ்டில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×