search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன்- 7 வருடத்திற்குப்பின் காலிறுதிக்கு முன்னேறினார் நடால்
    X

    விம்பிள்டன்- 7 வருடத்திற்குப்பின் காலிறுதிக்கு முன்னேறினார் நடால்

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜாம்பவான் நடால் 7 வருடத்திற்குப்பின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #Wimbledon2018 #Nadal
    டென்னிஸில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்திருப்பவர் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடால். செம்மண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனை மட்டும் 11 முறை வென்ற உலக சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியா ஓபனை 2009-ம் ஆண்டிலும், விம்பிள்டனை 2008 மற்றும் 2010-லும், அமெரிக்கா ஓபரை 2010, 2013, 2017-லும் கைப்பற்றியுள்ளார்.

    32 வயதாகும் ரபெல் நடால் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் காலிறுதிக்கு கடைசியாக 2011-ம் ஆண்டுதான் தகுதி பெற்றிருந்தார். அதன்பிறகு நான்கு சுற்றுகளுக்கு மேல் முன்னேறியது கிடையாது. தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். அவருக்கு ரோஜர் பெடரர் கடும் சவாலாக இருப்பார்.



    நடால் விம்பிள்டன் தொடரில் 2006-ல் இருந்து 2011-ம் ஆண்டு வரை சிறப்பாக விளையாடி இரண்டு முறை சாம்பியன் பட்டமும், மூன்று முறை 2-வது இடமும் பிடித்துள்ளார். 2009-ல் காயம் காரணமாக விளையாடவில்லை. அதன்பின் விம்பிள்டனில் நடாலுக்கு சறுக்கல்தான் ஏற்பட்டது.
    Next Story
    ×