search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊக்க மருத்து சோதனையில் தோல்வி அடைந்ததற்கு இதுதான் காரணம் - பிரண்டன் மெக்கல்லம்
    X

    ஊக்க மருத்து சோதனையில் தோல்வி அடைந்ததற்கு இதுதான் காரணம் - பிரண்டன் மெக்கல்லம்

    2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது ஊக்க மருத்து சோதனையில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். #BrendonMcCullum #PositiveDrugTest #IPL2016

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது.

    இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2016-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். அந்த சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் மெக்கல்லம் 36 பந்தில் 60 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியின் போது மெக்கல்லம் ஊக்க மருந்து சோதனைக்கு உட்கொள்ளப்பட்டார். அவரது சிறுநீர் மாதிரியில் சால்புடமோல் என்னும் மருந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மெக்கல்லம் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், அந்த ஊக்க மருத்து சோதனையில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் டெல்லியில் காற்றில் அதிக மாசு கலந்திருந்தது. தனக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்ததால், அப்போது அதிக அளவிலான ஆஸ்துமா மருந்து எடுத்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே தனது சிறுநீர் மாதிரியில் சால்புடமோல் அளவு அதிகமாகியதாக அவர் கூறியுள்ளார்.

    மேலும் அந்த மருந்தை பயன்படுத்த ஏற்கனவே அனுமதி பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீதான ஊக்க மருந்து புகார் முடிவுக்கு வந்துள்ளது. #BrendonMcCullum #PositiveDrugTest #IPL2016
    Next Story
    ×