search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாக்கியை பிரபலப்படுத்தும் முயற்சி - ஒடிசா முதல் மந்திரிக்கு முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டு
    X

    ஹாக்கியை பிரபலப்படுத்தும் முயற்சி - ஒடிசா முதல் மந்திரிக்கு முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டு

    ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக்கின் முயற்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டியுள்ளார். #NaveenPatnaik #Hockey #DilipTirkey
    புவனேஷ்வர்:

    இந்தியாவின் தேசிய விளையாட்டாக அனைவராலும் அறியப்படுவது ஹாக்கியாகும். ஆனால் அதற்கான அறிவிப்புகள் இதுவரையில் அரசு இதழில் வெளியிடப்படவில்லை.

    இதற்கிடையே, ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், அடுத்த ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வருகிற நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. ஹாக்கி விளையாட்டை தேசிய விளையாட்டு என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது அறிந்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஹாக்கி ரசிகர்கள் மனநிலையை புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். இந்தியாவை உலகளவில் பெருமைப்பட செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு சிறந்த மரியாதையாக இருக்கும் என கூறியுள்ளார்.



    இந்நிலையில், ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக்கின் முயற்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் திலிப் திர்கே பாராட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒடிசா முதல் மந்திரியின் முயற்சிக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கியில் தான் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது, எனவே கட்டாயம் ஹாக்கியை பிரபலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். #NaveenPatnaik #Hockey #DilipTirkey
    Next Story
    ×