என் மலர்

  செய்திகள்

  குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் - ஜோகோவிச், டிமித்ரோவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
  X

  குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் - ஜோகோவிச், டிமித்ரோவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லண்டனில் நடைபெற்றுவரும் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், டிமித்ரோவ் உள்ளிட்டோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர். #QueensClubChampionships #NovakDjokovic #GrigorDimitrov

  லண்டன்:

  குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. 

  இதில் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச், அஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் 6-2 என முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 6-2, 6-1 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்ற ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

  மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ், போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினாவின் டாமிர் ஜூமரை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை டிமித்ரொர்வ் 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 7-6 (7-4) என ஜூமர் போராடி கைப்பற்றினார். மூன்றாவது செட்டை டிமித்ரோவ் 6-3 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-3, 6-7 (4-7), 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற டிமித்ரோவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

  இதுதவிர ஆஸ்திரேலியாவின் நிக் கைர்கியோஸ், பிரிட்டனின் கைல் எட்மண்ட், கனடாவின் மிலோஸ் ரவுனிக் உள்ளிட்டோரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #QueensClubChampionships #NovakDjokovic #GrigorDimitrov
  Next Story
  ×