என் மலர்

  செய்திகள்

  குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் - ரோகன் போபன்னா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
  X

  குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் - ரோகன் போபன்னா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லண்டனில் நடைபெற்றுவரும் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபன்னா, பிரான்சின் ரோஜர்-வேஸ்லின் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. #QueensClubChampionships #RohanBopanna #RogerVasselin

  லண்டன்:

  ஆடவருக்கான குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபன்னா - பிரான்சின் ரோஜர்-வேஸ்லின் ஜோடி, தென்னாப்ரிக்காவில் கெவின் ஆண்டர்சன் - பிரான்சின் ஜூலியன் பென்னெடியூ ஜோடியை எதிர்கொண்டது.

  இப்போட்டியில் போபன்னா ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் செட்டை போபன்னா - ரோஜர் ஜோடி 6-3 என எளிதாக கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் ஆண்டர்சன் - ஜூலியன் ஜோடி சிறப்பாக எதிர்ஜோடிக்கு ஈடுகொடுத்து விளையாடியது.

  இருப்பினும் போபன்னா-ரோஜர் ஜோடி அந்த செட்டையும் 7-6 (7-3) என கைப்பற்றியது. இறுதியில் 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற போபன்னா-ரோஜர் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. #QueensClubChampionships #RohanBopanna #RogerVasselin
  Next Story
  ×