search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீஸ் துள்ளியமாக இருக்காது- பிபா தலைவர் எச்சரிக்கை
    X

    வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீஸ் துள்ளியமாக இருக்காது- பிபா தலைவர் எச்சரிக்கை

    உலகக் கோப்பையில் வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீஸ் துள்ளியமாக இருக்காது என பிஃபா நடுவருக்கான தலைவர் எச்சரித்துள்ளார். #WorldCup2018
    உலகின் மிகப்பெரிய விளையாட்டாக கால்பந்து போட்டி விளங்கி வருகிறது. இதன் தலைமையான பிஃபாவின் கீழ் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராக உள்ளது. எந்தவித இடையூறும் இல்லாமல் 90 நிமிடங்கள் போட்டி விறுவிறுப்பாகச் செல்லும். முக்கியமான போட்டிகளில் மைதான நடுவர்களின் தீர்ப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    குறிப்பாக பெனால்டி வாய்ப்பின்போது நடுவர்களின் முடிவு மிகமிக முக்கியமானது. அதேபோல் வீரர்களை தடுத்து கீழே விழச் செய்யும்போது மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை வழங்கும்போது நடுவர்கள் முடிவு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் தொழில்நுட்பம் வாய்ந்த வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீஸ் (VAR - Video Assistant Referees) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தமுறைப்படி மைதான நடுவர் டிவி நடுவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்த முடியும். இந்த முறையால் போட்டியின் விறுவிறுப்பு குறைந்து விடும் என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

    இருந்தாலும் சில லீக்கில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தொடங்கும் உலகக் கோப்பையிலும் விஏஆர் அறிமுகமாகிறது. இந்த முறை துள்ளியமாக இருக்காது என்று பிஃபாவிற்கான நடுவர்களின் தலைவர் எச்சரித்துள்ளார்.



    இதுகுறித்து நடுவர்களின் தலைவர் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த தொழில்நுட்பத்திற்கு தயாராகிவிட்டதால், நாம் இதை உலகக் கோப்பையில் பார்க்க போகிறோம். ஆனால் இது துள்ளியமாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

    நாம் நம்பமுடியாத வகையில் சிறப்பான இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தொழில்நுட்பத்தால் 100 சதவிகிதம் பிரச்சினையை தீர்த்திவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை’’ என்றார்.
    Next Story
    ×