search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிபா உலகக் கோப்பையில் இந்தியா விளையாடுவது விரைவில் சாத்தியமாகும்- மத்திய அமைச்சர்
    X

    பிபா உலகக் கோப்பையில் இந்தியா விளையாடுவது விரைவில் சாத்தியமாகும்- மத்திய அமைச்சர்

    பிபா உலகக் கோப்பையில் இந்தியா விளையாடுவது விரைவில் சாத்தியமாகும் என்று மத்திய அமைச்சர் ரத்தோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #FIFA2018
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் வியாழக்கிழமை ரஷியாவில் தொடங்குகிறது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியை நடத்தும் ரஷியாவைத் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டும்.

    இதனால் முன்னணி அணிகள் கூட சில நேரங்களில் தகுதி பெற முடியாத நிலை ஏற்படும். ஜாம்பவான் மெஸ்சி விளையாடும் அர்ஜென்டினாவிற்கே சிக்கல் ஏற்பட்டது. கடைசி போட்டியில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடிக்க தகுதி பெற்றது. இத்தாலி அணி தகுதி பெற முடியாமலே போனது.

    இந்தியா இதுவரை பிபா உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது கிடையாது. இந்நிலையில் விரைவில் இந்தியா உலகக் கோப்பையில் விளையாடும் நிலை சாத்தியமாகும் என்று இந்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரத்தோர் கூறுகையில் ‘‘கால்பந்து மீதான ஆர்வம் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. ஐபிஎல் போட்டியை டிவியில் பார்த்ததுபோல், ஏராளமான மக்கள் பிபா 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை பார்த்து ரசித்தனர்.



    இந்தியா இதுவரை பிபா உலகக் கோப்பையில் விளையாடியது கிடையாது. ஆனால், நமக்கு அதற்கான ஆற்றல் இருக்கிறது. ஆற்றல் வாய்ப்புடன் இணைக்கப்பட்டால், விரைவில் உலகக் கோப்பையில் இந்தியா விளையாட ஆரம்பித்துவிடும். கால்பந்து மட்டுமல்ல எந்வொரு விளையாட்டிலும் அபாரமான ஆற்றல் நம்மிடம் உள்ளது.

    நான் சில நேரம் பிரேசிலுக்கு ஆதரவாகவும், அர்ஜென்டினாவிற்கு ஆதரவாகவும் வீரர்களின் ஆட்டத்தை பொறுத்து இருப்பேன், ஆனால், நான் எப்போதுமே இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். இந்தியா பிபா உலகக் கோப்பையில் விளையாடும்போது நாம் பார்க்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×