என் மலர்
செய்திகள்

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் - 8வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவுக்கு எதிரான 8-வது சுற்று போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். #ViswanathanAnand #NorwayChessChampionship
ஆஸ்லோ:
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது எட்டாவது போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். இதையடுத்து முதலிடத்தில் இருந்த ஆனந்த் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார். வீஸ்லி சோ - அமெரிக்கா, பேபியானோ கார்வானா - அமெரிக்கா, கார்ல்சன் - நார்வே, ஹிகாரு நாகமுரா - அமெரிக்கா ஆகியோர் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். #ViswanathanAnand #NorwayChessChampionship
Next Story