search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லீட்ஸ் டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 363 ரன்னுக்கு ஆல் அவுட்
    X

    லீட்ஸ் டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 363 ரன்னுக்கு ஆல் அவுட்

    பாகிஸ்தானுக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களை எடுத்துள்ளது. #ENGvPAK
    லண்டன்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய குக் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரூட் 45 ரன்னிலும், டேவிட் மலன் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 21 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 34 ரன்களுடனும், சாம் குர்ரன் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோஸ் பட்லர் அரை சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம் குர்ரன் 20 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்னிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 ரன்னில் அவுட்டாகினர். ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvPAK
    Next Story
    ×