என் மலர்

  செய்திகள்

  பாதி காலத்திற்குப் பிறகு டெஸ்ட் சாதனை பற்றி சிந்திக்க ஒன்றுமில்லை- ரோகித் சர்மா
  X

  பாதி காலத்திற்குப் பிறகு டெஸ்ட் சாதனை பற்றி சிந்திக்க ஒன்றுமில்லை- ரோகித் சர்மா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என்னுடைய பாதி கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது, டெஸ்ட் சாதனை பற்றி சந்திக்க ஒன்றுமில்லை என ஹிட்மேன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
  இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் அதிரடி மன்னனாக விளங்குபவர் ரோகித் சர்மா. ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். டி20 போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

  31 வயதாகும் ரோகித் சர்மா 2007-ல் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் அறிமுகமானார். ஆனால் 7 வருடம் கழித்து டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக கொல்கத்தாவில் ஆடிய முதல் போட்டியிலேயே 177 ரன்கள் குவித்து அசத்தினார்.

  அதன்பின் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால் தொடர்ந்து டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் தொடரின்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

  இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் கவலையடவில்லை. மாறாக என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதி முடிவடைந்து விட்டது. டெஸ்ட் சாதனைப் பற்றி யோசனை செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

  இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஒரு வீரராக எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம்தான் உண்டு. நான் அதில் பாதியை முடித்துவிட்டேன். நான் அணியில் தேர்வு செய்வது அல்லது தேர்வு செய்யாதது பற்றி மீதியிருக்கும் பாதி காலத்தில் சிந்திப்பதற்கு ஒன்றுமில்லை. நான் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ, அதை எதிர்பார்த்து சென்று கொண்டிருக்கிறேன்.  அணியில் நான்  இருக்கிறேனா அல்லது இல்லையா என்பதை பற்றி கவலைப்படும் நிலையில் நான் இல்லை. என்னுடைய ஆட்டத்தை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எனக்கு தேவையானது. என்னுடைய முதல் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில்தான் நான் அணியில் இடம்பெறுவேனா? இல்லையா? என்பதை பற்றி யோசித்திருக்க வேண்டும். தற்போது எல்லாம் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்பதுதான். அணியில் இடம்பிடிப்பது குறித்து யோசித்தால் அது நெருக்கடியை உண்டாக்கும்’’ என்றார்.

  ரோகித் சர்மா இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதம், 9 அரைசதங்களுடன் 1479 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 39.97 ஆகும்.
  Next Story
  ×