search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சாலாவை காயத்திற்குள்ளாக்கிய ரமோஸ்க்கு எதிராக ரூ. 7837 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு
    X

    சாலாவை காயத்திற்குள்ளாக்கிய ரமோஸ்க்கு எதிராக ரூ. 7837 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு

    யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சாலா காயம் ஏற்பட காரணமாக இருந்த ரமோஸ்க்கு எதிராக ரூ. 7837 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    யூரோப்பா சாம்பியன் லீக் இறுதிப் போட்டி உக்ரைனில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காரேத் பேலேயின் அபார ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்றது.

    முதல் பாதி நேரத்தின்போது முகமது சாலா பந்தை கோல்நோக்கி எடுத்துச் சென்றார். அப்போது ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனும், பின்கள வீரருமான செர்ஜியோ ரமோஸ் சாலாவை தள்ளிக் கொண்டே பந்தை பறிக்க முயன்றார். ஒரு கட்டத்தில் செர்ஜியோ ரமோஸ் சாலாவின் கையை வசமாக தன் கைக்குள் பிடித்துக் கொண்டு பலமாக தள்ளினார்.

    இதனால் சாலா தரையில் விழுந்தார். அப்போது இடது கை தோள்பட்டை தரையில் பலமாக தாக்கியது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வலி தாங்க முடியாமல் சாலா வெளியேறினார். இதற்காக செர்ஜியோ ரமோஸிற்கு எந்தவித தண்டனையும் (மஞ்சள் அட்டை இல்லை சிகப்பு அட்டை) கொடுக்கப்படவில்லை. இது லிவர்பூல் அணி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சாலாவின் சொந்த நாடான எகிப்தின் அனைத்து ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இச்சம்பவத்தில் பெரும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ஒருவர், செர்ஜியோ ரமோஸ் வேண்டுமென்றே சாலா காயத்திற்கு உள்ளாக்கியுள்ளார். இதனால் அவரை மனதளவிலும், உடல் அளவிலும் காயப்படுத்திய சாலாவிற்கும், எகிப்பு மக்களுக்கும் ஒரு பில்லியம் யூரோ (ரூ. 7837 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், பிபாவிற்கு புகாரும் அளித்துள்ளார்.
    Next Story
    ×