என் மலர்

  செய்திகள்

  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து முஸ்டாபிஜூர் ரஹ்மான் விலகல்
  X

  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து முஸ்டாபிஜூர் ரஹ்மான் விலகல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து முஸ்டாபிஜூர் ரஹ்மான் விலகியுள்ளார். #AFGvBAN
  ஆப்கானிஸ்தான் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் டேராடூனில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டங்கள் ஜூன் 3, 5 மற்றும் 7-ந்தேதிகளில் நடக்கிறது.

  இதற்கான வங்காள தேச அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஜூர் ரஹ்மான் இடம்பிடித்திருந்தார். ஐபிஎல் தொடரின்போது இடது கால் பெருவிரல் பகுதியில் காயம் ஏற்பட்டது.  இந்த காயம் குணமடைய இரண்டு அல்லது மூன்ற வாரங்கள் ஆகும் என டாக்டர்கள் வலியுறுத்தியதால், ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து முஸ்டாபிஜூர் ரஹ்மான் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய வீரர் அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த தொடருக்காக இன்று வங்காள தேசத்தில் இருந்து அந்த அணி டேராடூன் புறப்படுகிறது.

  Next Story
  ×