என் மலர்

  செய்திகள்

  கை பெருவிரலில் காயம்- ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சகா பங்கேற்பது சந்தேகம்
  X

  கை பெருவிரலில் காயம்- ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சகா பங்கேற்பது சந்தேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சகா பங்கேற்பது சந்தேகம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் விருத்திமான் சகா. இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் விளையாடியது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதில் அவரின் விரலில் முறிவு ஏற்பட்டது.  இந்த காயம் குணமடைய ஐந்து முதல் 6 வாரம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சகா விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகல் விரைவில் வெளியாகும். ஒருவேளை காயம் குணமடைய 6 வாரங்கள் தேவைப்பட்டால் இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவது சந்தேகம்தான்.
  Next Story
  ×