search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் டெஸ்ட் - பட்லர், பெஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 235/6
    X

    லார்ட்ஸ் டெஸ்ட் - பட்லர், பெஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 235/6

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாம் நாளில் இங்கிலாந்து ஆறு விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK
    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்க வீரர் அலைஸ்டர் குக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி 70 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 58.2 ஓவர்களுக்கு 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர். ஹரிஸ் சொகைல் 39 ரன்னில் வெளியேறினார். ஆசாத் சபிக் 59 ரன்னில் அவுட்டாகினார். நிதானமாக ஆடிய பாபர் ஆசம் 68 ரன்கள் எடுத்தபோது காயத்தால் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஷதப் கான் அரை சதமடித்து அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 110 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது.



    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 114. 3 ஓவரில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட் 68 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழக்க 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் டொமினிக் பெஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். இருவரும் இணைந்து 125 ரன்கள் சேர்த்துள்ளனர்.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 66 ரன்னுடனும், டொமினிக் பெஸ் 55 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    பாகிஸ்தான் சார்பில் மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஷதப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தற்போது இங்கிலாந்து அணி 56 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #ENGvPAK
    Next Story
    ×