என் மலர்

  செய்திகள்

  சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி: ரியல் மாட்ரிட் 2-வது முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்குமா?
  X

  சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி: ரியல் மாட்ரிட் 2-வது முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்குமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 3-வது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ரியல் மாட்ரிட் சாதனைப் படைத்துள்ளது. #UCL #RealMadrid
  ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் லீக்கில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. காலிறுதி ஆட்டங்கள் முடிவில் ரியல் மாட்ரிட், ரோமா, பேயர்ன் முனிச், லிவர்பூல் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இரண்டு லெக்காக நடைபெற்றன.

  கடந்த மாதம் 25-ந்தேதி நடைபெற்ற அரையிறுதியின் முதல் லெக்கில் ரியல் மாட்ரிட் பேயர்ன் முனிச்சை எதிர்கொண்டது. இதில் ரியல் மாட்ரிட் 2-1 என வெற்றி பெற்றது.

  2-வது லெக் கடந்த 2-ந்தேதி ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் பென்சிமா இரண்டு கோல்கள் அடிக்க 2-2 என போட்டி டிராவில் முடிந்தது. முதல் லெக்கில் 2-1 என வெற்றி பெற்றதால் ஒட்டுமொத்தமாக 4-3 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரியல் மாட்ரிட் கடந்த இரண்டு சீசனில் (2015-16, 2016-17) இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மட்டுமல்லாது சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

  தற்போது 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தினால் தொடர்ச்சியாக 3-வது முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைக்கும். இதற்கு முன் பேயர்ன் முனிச், அஜாக்ஸ், ரியல் மாட்ரிட் அணிகள் ஹாட்ரிக் சாதனைகள் படைத்துள்ளது. தற்போது ஹாட்ரிக் படைத்தால் 2-வது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெறும்.
  Next Story
  ×