search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் லீக்- ரோமாவிற்கு எதிராக தப்பி பிழைத்து இறுதிப் போட்டியில் லிவர்பூல்
    X

    சாம்பியன்ஸ் லீக்- ரோமாவிற்கு எதிராக தப்பி பிழைத்து இறுதிப் போட்டியில் லிவர்பூல்

    சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் ரோமாவிற்கு எதிராக 7-6 என நூலிழையில் வெற்றி பெற்று லிவர்பூல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. #Liverpool #Roma
    ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் லீக்கில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. காலிறுதி ஆட்டங்கள் முடிவில் ரியல் மாட்ரிட், ரோமா, பேயர்ன் முனிச், லிவர்பூல் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இரண்டு லெக்காக நடைபெற்றன.

    கடந்த மாதம் 25 மற்றும் 26-ந்தேதிகளில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-1 என போயர்ன் முனிச்சையும், லிவர்பூல் 5-2 என ரோமாவையும் வீழ்த்தியிருந்தது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு ரோமா - லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் நடைபெற்றது. லிவர்பூலை கோல் அடிக்க விடாமல், நான்கு கோல்கள் அடித்தால் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம் என்ற நோக்கத்தில் ரோமா சொந்த மைதானத்தில் களம் இறங்கியது.

    ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் சாடியோ மானே லிவர்பூல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். இதனால் 1-0 என முன்னிலைப் பெற்றது. 15-வது நிமிடத்தில் ஓன்கோல் மூலம் ரோமாவிற்கு ஓரு கோல் கிடைத்தது. 25-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் விஜ்னால்டம் ஒரு கோல் அடித்தார்.

    இதனால் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் ரோமா வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருந்தாலும் அந்த அணியால் இரண்டு கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 4-2 என ரோமா வெற்றி பெற்றிருந்தது.

    ஆனால் முதல் லெக்கில் லிவர்பூல் 5-2 என வெற்றி பெற்றிருந்ததால் ஓட்டுமொத்தமாக 7-6 என வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    Next Story
    ×