search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் முகமது சாலா
    X

    கால்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் முகமது சாலா

    லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் முகமது சாலா கால்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். #MohamedSalah #FWA
    எகிப்து நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா. 25 வயதாகும் இவர், எகிப்து தேசிய அணிக்காக கடந்த 2011-ல் இருந்து விளையாடி வருகிறார். கடந்த 2014 முதல் 2016 வரை இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் தலைசிறந்த அணிகளில் ஒன்றான செல்சிக்காக விளையாடினார். அப்போது 13 போட்டிகளில் மட்டுமே களம் இறங்கி 2 கோல்கள் அடித்துள்ளார்.

    இதனால் 2015-ல் ரோமா அணிக்கு லோன் மூலம் டிரான்ஸ்பர் ஆனார். அப்போது 34 போ்டடிகளில் 14 கோல்கள் அடித்தார். அதன்பின் 2016 -ல் ரோமா அணிக்கு முறைப்படி டிரான்ஸ்பர் ஆனார். 2016 முதல் 2017 வரை ரோமா அணிக்கு விளையாடினார். அப்போது 31 போட்டிகளில் 15 கோல்கள் அடித்தார்.

    2017-ல் லிவர்பூல் அணி முகமது சாலாவை வாங்கியது. லிவர்பூல் அணிக்கு மாறியதும் முகமது சாலா ஆட்டத்தில் ஆக்ரோஷம் வெளிப்பட்டது. 2017-18 சீசனில் லிவர்பூல் அணிக்காக இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் 34 ஆட்டத்தில் 31 கோல்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக லிவர்பூல் அணிக்காக 48 ஆட்டத்தில் 43 கோல்கள் அடித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி முதல் லெக்கில் ரோமாவை 5-2 என லிவர்பூல் துவம்சம் செய்தது. இதில் சாலா இரண்டு கோல்கள் அடித்தார்.

    இந்த வருடத்திற்கான இங்கிலாந்தின் கால்பந்து எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்யும் நடைமுறை நடைபெற்றது. இதில் 400 பத்திரிகையாளர்கள் வாக்களித்தனர்.



    இந்த வாக்கெடுப்பின் முடிவில் முகமது சாலா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 20-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டியின் டி ப்ரூயின் 2-வது இடம்பிடித்தார்.

    கடந்த மாதம் தொழில்முறை கால்பந்து வீரர்களுக்கான சங்கத்தின் சிறந்த வீரர் விருதை பெற்றிருந்தார். தற்போது 2-வது விருதை தட்டிச் சென்றுள்ளார். ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் எழுத்தாளர்கள் சங்க விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும். விருது வழங்கும் விழா வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. #MohamedSalah #FWA #EPL #Liverpool
    Next Story
    ×