என் மலர்

  செய்திகள்

  பதக்கத்துடன் ஒலிம்பிக் சாதனை படைக்க விரும்பும் மல்யுத்த வீராங்கனை
  X

  பதக்கத்துடன் ஒலிம்பிக் சாதனை படைக்க விரும்பும் மல்யுத்த வீராங்கனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் பதக்கத்துடன் ஒலிம்பிக் சாதனையை படைக்க விரும்புவதாக கூறியுள்ளார். #VineshPhogat
  ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் சமீபத்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது. இதில் மல்யுத்தம் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்க பதக்கம் வென்றார். இது அவரின் 2-வது காமன்வெல்த் தங்கமாகும். 2016-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரை முன்னேறினார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

  இந்நிலையில் 2020 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுடன், வரலாற்றுச் சாதனை படைக்கவும் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து 23 வயதான வினேஷ் போகத் கூறுகையில் ‘‘அடுத்த வருடத்தில் இருந்து ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடங்கும். அப்புறம் ஒலிம்பிக் தொடருக்கு தயாராக வேண்டும். ஒலிம்பிக் தொடருக்கு போதுமான அளவு நேரம் உள்ளது. ஆனால், என்னுடைய எல்லாம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை நோக்கிதான் உள்ளது.

  மல்யுத்தத்தில் ஒலிம்பிக் தொடரில் நாம் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளோம். ஆனால், தங்கம் மட்டும் பாக்கி உள்ளது. ஆகவே, தங்கம் கொண்டு வரும் யாராக இருந்தாலும், அவர்கள் இந்திய தேசியத்தின் ஹீரோ.  ஒலிம்பிக் தொடருக்குப்பின் காமன்வெல்த் போட்டிகள்தான் என்னுடைய மிகப்பெரிய போட்டி. ஒலிம்பிக் போட்டியில் மக்கள் என்னிடம் அதிக அளவில் எதிர்பார்த்தார்கள். ஆனால், நான் காயம் அடைந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

  காயத்தில் இருந்து மீண்டு, போட்டியில் கலந்த கொண்டு வெற்றி பெறுவதும் மற்ற வீரர்களுக்கும் உத்வேகமாக இருக்கும். ஒவ்வொரு வெற்றியும் வீரர்களின் வெற்றி கிடையாது. இந்தியாவின் வெற்றி’’ என்றார்.
  Next Story
  ×