search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை- இந்தியா 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம்
    X

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை- இந்தியா 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம்

    ஐசிசி-யின் வருடாந்திர அப்டேட் முடிவில் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து கம்பீரமாக முதல் இடத்தில் நீடிக்கிறது. #ICCTestRankings
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2014-15 சீசனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 0-2 என இழந்தது. இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என தொடரை இழந்தது.

    அதன்பின் இந்திய டெஸ்ட் அணிக்கு வசந்த காலம்தான். 2016-17 சீசனில் 13 டெஸ்டில் 10 டெஸ்டில் வெற்றி வாகைச் சூடியது.

    இறுதியாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-2 எனத் தொடரை இழந்தது. என்றாலும் ஐசிசி-யின் கட்ஆஃப் தேதிக்குள் இந்தியா முதல் இடத்தில் நீடித்தது. இதனால் ஐசிசியின் விருதை பெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் இறுதியில் ஆண்டு இறுதி அப்டேட்டை வெளியிடும். இதில் இந்தியா 125 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. 2-வது இடத்தில் இருந்து தென்ஆப்பிரிக்கா ஐந்து புள்ளிகள் இழந்து 112 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 13 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.

    ஆஸ்திரேலியா நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 106 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து 4-வது இடத்தையும், இங்கிலாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
    Next Story
    ×