என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிடலாமா?- விஜய் சங்கர் பதில்
Byமாலை மலர்1 March 2018 1:59 PM GMT (Updated: 1 March 2018 1:59 PM GMT)
இந்திய அணியில் ஆல்ரவுண்டராக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவுடன் தன்னை ஒப்பிடலாமா என்பதற்கு விஜய் சங்கர் பதில் அளித்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் கபில்தேவ். இவருக்குப்பின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை தயார் செய்வதில் இந்திய அணிக்கு கடும் சிரமமாக இருந்தது.
ஒரு வழியாக நீண்ட ஆண்டுகள் கழித்து ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக உருவெடுத்தார். இவர் கபில்தேவ் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஓரளவிற்கு விளையாடினாலும், மெச்சும் அளவிற்கு ஜொலிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்ஆப்பிரிக்கா தொடரில் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் மட்டும் 93 ரன்கள் எடுத்தார். அதன்பின் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன் இந்தியா இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் மாற்று ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஆடும் லெவனில் விஜய் சங்கருக்கு இடம்கிடைக்கவில்லை. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, விஜய் சங்கர் இந்திய அணியின் மாற்று ஆல்ரவுண்டர் என்று கூறினார்.
வருகிற 6-ந்தேதி இலங்கையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் இலங்கை, இந்தியா, வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர். இவருக்குப் பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவுடன் விஜய் சங்கரை ஒப்பிடலாமா? என்று வினா எழுந்துள்ளது.
இதுகுறிது விஜய் சிங்கர் கூறுகையில் ‘‘மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும். அதேவேளையில் சிறப்பாக பந்து வீச வேண்டும். மைதானத்திற்குள் கால் எடுத்து வைத்தாலே எதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். அமைதியாக இருந்து உங்களுடைய வழியில் விளையாடினால், எந்த இடத்திலும் உங்களால் விளையாட முடியும்.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களாலும் குறிப்பிட்ட சிறப்புகளை அளிக்க முடியும். ஒரு கிரிக்கெட்டராக ஒவ்வொருவருடைய ஆட்டத்தையும் நாம் பார்க்கிறோம். ஒவ்வொருவரிடம் இருந்தும் நாம் கற்றுக் கொள்ள முடியும். இது ஒப்பிட்டு பார்ப்பதற்கான அர்த்தம் கிடையாது.
நான் எப்போதும் உள்ளூர் கிரிக்கெட்டை மிகவும் முக்கியமானதாக பார்ப்பதுண்டு. அடுத்த லெவலுக்குச் செல்வதற்கான நம்பிக்கை இங்கிருந்துதான் கிடைக்கும். ஆகவே, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது எனக்கு முக்கியமானதாகும்.
அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிப்பதை பற்றி அதிக அளவில் நான் சிந்திக்கவில்லை. இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை எடுத்துக் கொள்வேன். நான் உலகக்கோப்பை பற்றியோ அல்லது மற்றவை மற்றியோ சிந்துத்துக் கொண்டிருக்கவில்லை. சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதுதான் முக்கியமானது’’ என்றார்.

Next Story
×