என் மலர்

  செய்திகள்

  கால்பந்து லீக் கோப்பை- அர்செனலை 3-0 என வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்
  X

  கால்பந்து லீக் கோப்பை- அர்செனலை 3-0 என வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கால்பந்து லீக் கோப்பை இறுதி போட்டியில் அர்செனலை 3-0 என வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் பட்டம் வென்றது. #FLC #mancity #arsenal
  கால்பந்து லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டி நேற்றிரவு விம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மான்செஸ்டர் சிட்டி - அர்செனல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மான்செஸ்டர் சிட்டி, இதில் அர்செனல் அணிக்கெதிராக சிறப்பாக விளையாடியது.

  ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் செர்ஜியோ அகியூரோ முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் இரு அணிகளும் முதல் பாதி நேரத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் 1-0 என மான்செஸ்டர் சிட்டி முன்னிலை வகித்தது.  2-வது பாதி நேர ஆட்டத்திலும் மான்செஸ்டர் சிட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வின்சென்ட் கோம்பேனி 58-வது நிமிடத்திலும், டேவிட் சில்வா 65-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

  இதனால் மான்செஸ்டர் சிட்டி 3-0 என வலுவான முன்னிலைப் பெற்றது. அர்செனல் வீரர்கள் ஒரு கோலாவது அடித்து விடலாம் என்று போராடினார்கள். ஆனால் மான்செஸ்டர் சிட்டி அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. இதனால் மான்செஸ்டர் சிட்டி 3-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. #FLC #mancity #arsenal
  Next Story
  ×