என் மலர்

  செய்திகள்

  முதல் 6 ஓவரில் சிறப்பாக ஆடுவது முக்கியம்: சுரேஷ் ரெய்னா
  X

  முதல் 6 ஓவரில் சிறப்பாக ஆடுவது முக்கியம்: சுரேஷ் ரெய்னா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடைசி 20 ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தாலும், சேசிங்காக இருந்தாலும் முதல் 6 ஓவரில் அபாரமாக ஆடுவது அவசியம் என சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். #SAvIND #INDvSA #Raina
  கேப்டவுன்:

  வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

  இதன் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

  மூன்றாவது 20 ஓவர் தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

  இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவும் 20 ஓவர் தொடரை வெல்லும் வேட்கையில் உள்ளது.

  இன்றைய போட்டி தொடர்பாக இந்திய வீரர் ரெய்னா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  என் மீது நம்பிக்கை வைத்து வீராட்கோலி வாய்ப்பு அளித்தற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 20 ஓவர் போட்டி அணியில் இடம் பெற்றது போல் ஒரு நாள் போட்டி அணியிலும் இடம் பெறும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

  தென் ஆப்பிரிக்காவின் ஆக்ரோ‌ஷம் குறித்து நாங்கள் பெரிதாக கவலைப்படவில்லை. எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது. இதனால் தென் ஆப்பிரிக்காவின் சேசிங்கை எங்களால் கட்டுப்படுத்த இயலும். தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த நாங்கள் புதிய திட்டம் வைத்துள்ளோம்.

  முதல் 6 ஓவரில் சிறப்பாக விளையாடுவது முக்கியமானது. முதலில் பேட்டிங் செய்தாலும், சேசிங்காக இருந்தாலும் முதல் 6 ஓவரில் அபாரமாக ஆடுவது அவசியமானது. இதை வைத்துத்தான் ஆட்டம் முடிவு செய்யப்படும்.

  இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்.
  Next Story
  ×