என் மலர்

    செய்திகள்

    தேசிய சீனியர் கூடைப்பந்து இன்று தொடக்கம்
    X

    தேசிய சீனியர் கூடைப்பந்து இன்று தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    57 அணிகள் பங்கேற்கும் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. #Basketball
    சென்னை:

    தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் அரைஸ் ஸ்டீல் நிறுவன ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    இந்தப்போட்டி நாளை (17-ந் தேதி) முதல் வருகிற 24-ந்தேதி வரை 8 நாட்கள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் 31 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் பங்கேற்கின்றன.

    ‘லீக்’ மற்றும் நாக்அவுட் முறையில் இந்தப்போட்டி நடக்கிறது. லெவல்-1, லெவல்-2 என்ற அடிப்படையில் அணிகள் பிரிக்கப்படும். லெவல்-1-ல் சிறந்த அணிகளும், லெவல்- 2-ல் பின்தங்கிய அணிகளும் இடம் பெறும். கடந்த ஆண்டு புதுவையில் நடந்த போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த அணிகளும் லெவல்1-ல் இடம் பெறும். இந்த 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெறும். மற்ற அணிகள் லெவல் 2-ல் உள்ளன.

    ‘லீக்’ முடிவில் லெவல் 1-ல் இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இரண்டு பிரிவிலும் 4-வது இடத்தை பிடித்த அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் ஆடவேண்டும். லெவல் 2-வில் இருந்து ‘டாப்-2’ அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நுழையும். இந்த 4 அணியில் இருந்து 2 அணிகள் கால்இறுதி வாய்ப்பை பெறும்.

    கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் உத்தரகாண்ட், தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, அரியானா, இந்தியன் ரெயில்வே, கர்நாடகா, ஒடிசா, குஜராத் ஆகிய அணிகள் முறையே முதல் 10 இடங்களை பிடித்தன. பெண்கள் பிரிவில் கேரளா, தெலுங்கானா, இந்தியன் ரெயில்வே, சத்தீஷ்கர், தமிழ்நாடு, டெல்லி, மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் முறையே முதல் 10 இடங்களை பிடித்தன.

    தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடுவதால் சென்னை ரசிகர்களுக்கு இந்தப்போட்டி நல்ல விருந்தாக அமையும். இந்தப் போட்டியின் அடிப்படையில் இந்திய அணிக்காக வீரர், வீராங்கனைகள் தேர்வு இருக்கும் என்பதால் ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    சென்னையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி நடக்கிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஆண்கள் பிரிவில் பஞ்சாப் அணியும், பெண்கள் பிரிவில் ரெயில்வே அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன. ஒட்டுமொத்தத்தில் சென்னையில் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி 5-வது முறையாக நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1952, 1959, 1973, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்துள்ளது.

    தமிழக ஆண்கள் அணி 9 முறை தேசிய பட்டத்தை கைப்பற்றி உள்ளது. கடைசியாக 2014-ம் ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது. கடந்த ஆண்டு புதுவையில் நடந்த போட்டியில் தமிழக அணி 2-வது இடத்தை பிடித்தது.

    தற்போது உள்ளூரில் நடப்பதால் தமிழக அணி சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. 2011-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் தமிழக அணி இறுதிப்போட்டியில் பஞ்சாப்பிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது.
    Next Story
    ×