என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடர்: பாக்சிங் டே டெஸ்டில் இருந்து மிட்செல் ஸ்டார்க் நீக்கம்
    X

    ஆஷஸ் தொடர்: பாக்சிங் டே டெஸ்டில் இருந்து மிட்செல் ஸ்டார்க் நீக்கம்

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இருந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீக்கப்பட்டுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாள் தொடங்கும் இப்போட்டிக்கு ‘பாக்சிங் டே’ என்று பெயர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடும் லெவனில் விளையாட விரும்புவார்கள்.

    முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் வலதுகாலின் குதிக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் மிட்செல் ஸ்டார்க் பாக்சிங் டே டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.



    ஸ்டார்க் விளையாட விரும்பிய நிலையிலும், அடுத்து தென்ஆப்பிரிக்காவுடன் ஆஸ்திரேலியா விளையாட இருக்கிறது. இதனால் ஸ்டார்க்கை விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. இதனால் பாக்சிங் டே டெஸ்டில் இருந்து நீக்கியுள்ளது.

    ‘‘அணியில் விளையாடாதது மிகச்சிறந்தது அல்ல. இருந்தாலும் 100 சதவீதம் உடற்தகுதி இல்லாமல் விளையாடுவது சுயநலமாக இருக்கும். நாங்கள் தொடரை வென்றுள்ளதால் பாதுகாப்பான நிலையுடன் விளையாட முடியும்’’ என ஸ்டார்க் கூறியுள்ளார்.
    Next Story
    ×