என் மலர்

  செய்திகள்

  ஐ.பி.எல். தொடரின் இரவு ஆட்டங்கள் 8 மணிக்குப் பதிலாக 7 மணிக்கு தொடங்க திட்டம்
  X

  ஐ.பி.எல். தொடரின் இரவு ஆட்டங்கள் 8 மணிக்குப் பதிலாக 7 மணிக்கு தொடங்க திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரில் இரவு ஆட்டங்கள் 8 மணிக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆட்டங்கள் 7 மணிக்கு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
  இந்திய கிரிக்கெட் வாரியத்தால் (பிசிசிஐ) நடத்தப்பட்டு வரும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) டி20 கிரிக்கெட் லீக் உலகளவில பிரபலம் அடைந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இந்த வருடத்துடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.

  அடுத்த ஆண்டு 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. 11-வது சீசனில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர ஐ.பி.எல். அணி உரிமையாளர்களும், பிசிசிஐ-யும் விரும்புகிறது. அதேவேளையில் ரசிகர்களின் ரசனை குறைந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது.  தற்போதைய நிலையில் இரவு ஆட்டங்கள் 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இரவு 12 மணியளவில் முடிவடையும். அதன்பின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லவும், வீரர்களும் ஓட்டல்களுக்குச் செல்லவும் நள்ளிரவு ஒரு மணி முதல் 1.30 மணி வரை ஆகிறது.  இதனால் போட்டியை இரவு 7 மணிக்கு நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த ஆலோசனைகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டால் போட்டி 7 மணிக்கு தொடங்கும்.
  Next Story
  ×