என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடர்: மொயீன் அலி, ஸ்டீபன் ஃபின் காயத்தால் இங்கிலாந்து கவலை
    X

    ஆஷஸ் தொடர்: மொயீன் அலி, ஸ்டீபன் ஃபின் காயத்தால் இங்கிலாந்து கவலை

    ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்து மொயீன் அலி, ஸ்டீவன் பின் ஆகியோர் காயம் அடைந்துள்ளதால் அந்த அணி கவலையடைந்துள்ளது.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க தொடர் என்பதால் இரண்டு அணிகளும் தொடரை வெல்ல தயாராகி வருகின்றன.

    இந்த தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து அணி வருகிற 4-ந்தேதி பெர்த்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

    இதற்கு தயாராகிய நிலையில் மொயீன் அலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். நாளை பெர்த்தில் அவர்கள் இருவருக்கும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.


    அப்போதுதான் அவர்கள் காயத்தின் வீரியம் குறித்து தெரியவரும். ஒருவேளை எழும்பு முறிவு ஏதும் இருந்தால் முதல் டெஸ்டில் பங்கேற்பது கடினமானதாகிவிடும். இதனால் இங்கிலாந்து அணி கவலை அடைந்துள்ளது.



    வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் வலைப்பயிற்சியின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது முட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் பயிற்சி சீசனை புறக்கணித்தார்.

    மொயின் அலி காயத்தால் அவதிப்பட்டுள்ள வந்துள்ளார். இதனால் 4-ந்தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×