என் மலர்
செய்திகள்

ஐரோப்பிய சாம்பியன்: 3-1 என வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சி அளித்தது டோட்டன்ஹாம்
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் வெம்ப்ளே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் அணியை 3-1 என வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது டோட்டன்ஹாம்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் - டோட்டன்ஹாம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லண்டனில் உள்ள வெம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது.
நடப்பு சாம்பியன் அணியான ரியல் மாட்ரிட்டுக்கு டோட்டன்ஹாம் அணி சரிசம பலத்தில் விளையாடியது. அந்த அணியின் டேல் அலி 27-வது நிமிடத்தில் கோல் அடித்தார். பின்னர் இரு அணி வீரர்களும் முதல் பாதி நேரத்தில் கோல் அடிக்காததால் முதல் பாதி நேரத்தில் டோட்டன்ஹாம் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

2-வது பாதி நேரத்திலும் டோட்டன்ஹாம் வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. 56-வது நிமிடத்தில் டேல் அலி மீண்டும் ஒரு கோல் அடித்தார். 65-வது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் ஒரு கோல் அடித்தார். இதனால் டோட்டன்ஹாம் 3-0 என வலுவான முன்னிலைப் பெற்றது.

ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 80-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார். அதன்பின் கோல் அடிக்க முடியாததால் 1-3 என ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
சில நாட்களுக்கு முன் லா லிகா தொடரில் ஜிரோனா அணிக்கெதிராக 1-2 என ரியல் மாட்ரிட் தோல்வியடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story