என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு நாட்கள் டெஸ்டிற்கு நான் பெரிய ரசிகன் அல்ல: குமார் சங்ககரா
    X

    நான்கு நாட்கள் டெஸ்டிற்கு நான் பெரிய ரசிகன் அல்ல: குமார் சங்ககரா

    நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிற்கு நான் பெரிய ரசிகன் அல்ல என்று இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சங்ககரா கூறியுள்ளார்.
    டி20 கிரிக்கெட் அறிமுகமான பின்னர் ரசிகர்களிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆதரவு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், பெரும்பாலான போட்டிகள் ஐந்து நாட்கள் வரை நீடிப்பதில்லை. வீரர்களும் தங்களது உடற்தகுதியை ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் கட்டுக்கோப்பாக வைப்பதில்லை.

    டி20 லீக் தொடர் நடைபெற்று வருவதால் பெரும்பாலான வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை விரும்புவதில்லை. இருந்தாலும் பாரம்பரியமான டெஸ்ட் கிரிக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதில் முன்னாள் வீரர்கள் கவனமாக உள்ளனர்.

    இந்நிலையில் முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை பரிசோதனை முறையில் நடத்த ஐ.சி.சி. ஒப்பதல் வழங்கியுள்ளது.

    நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிற்கு இந்தியா விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சங்ககரா, நான் பெரிய ரசிகன் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து குமார் சங்ககரா கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டி நான்கள் நாட்கள் மட்டுமே கொண்டது என்றால், நீங்கள் ஆஷஸ் தொடரை கற்பனை செய்து பாருங்கள். நான்கு நாட்கள் கொண்ட போட்டியின்போது மழை குறுக்கீட்டால் பாதிப்பு எற்படும்.



    ஆனாலும், வணிக ரீதியிலான திறன் மற்றும் பொருளாதாரம் குறித்து நான் புரிந்துள்ளேன். அதேவேளையில் பாரம்பரியம் மற்றும் வரலாற்று கருத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து ஆறு வருடங்களாக ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு நான் பெரிய ரசிகன் கிடையாது. ரசிகர்கள் அதிகள் நேரத்தை செலவழிக்க விரும்புவதில்லை என்பதால், ரசிகர்கள் விருப்பதிற்காக இது நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்கிறேன். இது மேலும் உள்ளூர் டி.வி. மற்றும் ஸ்பான்சர்களுக்கு சாதகமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் ஐந்து நாட்கள் என்று வரையறைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
    Next Story
    ×