search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர்: ஒன்றரை ஆண்டுக்குப்பின் மீண்டும் இடம்
    X

    டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர்: ஒன்றரை ஆண்டுக்குப்பின் மீண்டும் இடம்

    இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் ராஸ் டெய்லர் இடம்பிடித்துள்ளார்.
    இந்தியா -  நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை டெல்லியில் தொடங்குகிறது.

    இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அனுபவ வீரரான ராஸ் டெய்லருக்கு இடம் கிடைக்கவில்லை.

    நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டாட் ஆஸ்ட்லே இடம்பிடித்திருந்தார். பயிற்சி ஆட்டத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்ட்லே நீக்கப்பட்டு ராஸ் டெய்லர் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ராஸ் டெய்லர் நியூசிலாந்து டி20 அணியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பிடித்திருந்தார். அதன்பின் அந்த அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 155 ரன்கள் சேர்த்தார். இதனால் ராஸ் டெய்லருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.



    இந்தியாவிற்கு எதிரான மூன்று டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேன் வில்லியம்சன் (கேப்டனம்), 2. மிட்செல் சான்ட்னெர், 3. இஷ் சோதி, 4. டிம் சவுத்தி, 5. ராஸ் டெய்லர், 6. டிரென்ட் போல்ட், 7. டாம் ப்ரூஸ், 8. கொலின் டி கிராண்ட்ஹோம், 9. மார்ட்டின் கப்தில், 10. மாட் ஹென்றி, 11. டாம் லாதம், 12. ஹென்றி நிக்கோல்ஸ், 13. ஆடம் மில்னே, 14. கொலின் முன்றோ, 15. க்ளென் பிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்).
    Next Story
    ×