search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வாரிய பொதுமேலாளர் பதவியிலிருந்து எம்.வி.ஸ்ரீதர் ராஜினாமா
    X

    இந்திய கிரிக்கெட் வாரிய பொதுமேலாளர் பதவியிலிருந்து எம்.வி.ஸ்ரீதர் ராஜினாமா

    இந்திய கிரிக்கெட் வாரிய பொதுமேலாளர் பதவியிலிருந்து எம்.வி.ஸ்ரீதர் ராஜினாமா செய்துள்ளார். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிர்வாக கமிட்டி இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரிய பொதுமேலாளராக ஐதராபாத்தைச் சேர்ந்த எம்.வி.ஸ்ரீதர் செயல்பட்டு வந்தார். இவர், ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், பிசிசிஐ பொதுமேலாளரான பிறகும், ஸ்ரீதர் ஐதராபாத்திலேயே தங்கியிருந்தார். அலுவல் நடவடிக்கைகளுக்காக அவர் அவ்வப்போது மும்பை வந்து சென்று வந்தார். ஆனால் பிசிசிஐ தலைமையகம் அமைந்துள்ள மும்பையிலேயே ஸ்ரீதர் தங்கியிருக்க பிசிசிஐ விரும்பியது. இரட்டை விருப்பங்கள் அடிப்படையில் ஸ்ரீதர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டதால் அவர் பிசிசிஐ பொது மேலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இன்று நடைபெற்ற நிர்வாக கமிட்டி ஆலோசனை கூட்டத்தின்போது, ராஜினாமா கடிதத்தை ஸ்ரீதர் வழங்கியுள்ளார். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிர்வாக கமிட்டி இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளது.

    இருப்பினும் வருகிற 30ம் தேதிவரை ஸ்ரீதர் தனது பொறுப்பை தொடர்வார் என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் புதிய பொதுமேலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி இப்பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×