search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த 5 ஆண்டுக்கு ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ.14 ஆயிரம் கோடி கிடைக்கும்
    X

    அடுத்த 5 ஆண்டுக்கு ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ.14 ஆயிரம் கோடி கிடைக்கும்

    அடுத்த 5 ஆண்டுக்கு ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரை 10 சிசன் முடிந்துவிட்டது. இந்த 10-வது சீசன் வரை ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்று இருந்தது.

    இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் செப்டம்பர் 4-ந்தேதி நடக்கிறது. முன்னதாக இந்த ஏலம் கடந்த 28-ந்தேதி நடைபெற இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால் தாமதம் ஆனது. சுப்ரீம் கோர்ட்டு ஏலத்தை நடத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து 4-ந்தேதி நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். ஏலத்துக்கான போட்டியில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே ஐ.பி.எல். டைடில் ஸ்பான்சர் மூலம் கிரிக்கெட் வாரியம் ரூ.2,199 கோடி பெற்று இருந்தது.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளிடம் ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது. இதனால் ஒவ்வொரு அணியுடன் அடுத்த ஆண்டுக்கு ரூ.150 கோடி வரை கொடுக்க வேண்டி இருக்கும் என்று தெரிகிறது.
    Next Story
    ×