என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளராக இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம்
    X

    சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளராக இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம்

    சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளரான இருந்த இத்தாலியின் மார்கோ மெடாரசி நீக்கப்பட்டு, இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டில் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்திய கால்பந்து சம்மேளனமும் இந்தியன் சூப்பர் லீக் என்ற கால்பந்து தொடரை அறிமுகப்படுத்தியது. இதில் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் அணிகளை வாங்கியுள்ளனர்.

    2014 முதல் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் ஆதரவு அதிக அளவில் இருப்பதால் ஐ.எஸ்.எல். பிரபலம் அடைந்து வருகிறது. 2014-ல் கொல்கத்தா அணியும், 2015-ல் சென்னையின் எஃப்.சி. அணியும், 2016-ல் கொல்கத்தா அணியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    சென்னையின் எஃப்.சி. அணியின் உரிமையாளர்களில் ஒருவர் டோனி. இந்த அணியின் பயிற்சியாளராக இத்தாலியின் மார்கோ மெடாரசி இருந்தார். தற்போது அவர் நீக்கப்பட்டு இங்கிலாந்தின் 63 வயதான ஜான் கிரிகோரி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வீரராகவும், பயிற்சியாளராகவும் கால்பந்து துறையில் 40 வருட அனுபவம் உள்ளது.



    இங்கிலாந்து அணிக்காக 6 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஜான் கிரிகோரி, போர்ட்ஸ்மவுத் அணிக்காக முதன்முதலாக பயிற்சியாளராக பணியாற்றினார். அதன்பிறகு பிளைமௌத், வைகாம்போ வாண்டரர்ஸ், அஸ்டோன் வில்லா அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

    2000-ம் ஆண்டு இவரது தலைமையில் ஆஸ்டோன் வில்லா அணி எஃப்.ஏ. கோப்பை இறுதிப் போட்டியில் செல்சியா அணியிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×