என் மலர்

  செய்திகள்

  பிஃபா கான்பிடரேசன் கால்பந்து: போர்ச்சுக்கல் - மெக்சிகோ ஆட்டம் டிரா
  X

  பிஃபா கான்பிடரேசன் கால்பந்து: போர்ச்சுக்கல் - மெக்சிகோ ஆட்டம் டிரா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிஃபா கான்பிடரேசன் கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் - மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
  ரஷியாவில் கான்பிடரேசன் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்ச்சுக்கல் - மெக்சிகோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

  ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் குரேஷ்மா முதல் கோலை பதில் செய்தார். இதற்கு பதிலடியாக மெக்சிகோ அணியின் ஹெர்னாண்டஸ் 42-வது நிமிடத்தில் பதில்கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.  2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 85-வது நிமிடம் வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 86-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் செட்ரிக் ஒரு கோல் அடிக்க போர்ச்சுக்கல் 2-1 என முன்னிலையில் இருந்தது.

  90 நிமிடம் வரை மெக்சிகோ கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஓய்விற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 91-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் மொரேனோ ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
  Next Story
  ×