search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காபூல் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்தது ஆப்கானிஸ்தான்
    X

    காபூல் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்தது ஆப்கானிஸ்தான்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியை ஆப்கானிஸ்தான் ரத்து செய்துள்ளது.
    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் நேற்று தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரம்பிய லாரிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த கோர தாக்குதலில் 90 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 300-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஹக்கானி தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு இயக்குனரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், ஹக்கானி குழுவுக்கு பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

    இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக, கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர், பாகிஸ்தான் சென்று அங்குள்ள கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கானை சந்தித்தார். அப்போது இருநாடுகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான டி20 கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.


    90 பேர் உயிரை பறித்த காபூல் தாக்குதல்

    அதன்படி ஒரு போட்டி காபூல் நகரிலும் மற்றொரு போட்டி பாகிஸ்தான் மண்ணிலும் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் காரணமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானுடனான நட்பு ரீதியான போட்டியை ரத்து செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் எந்தவொரு போட்டியும் கிடையாது என்றும் அறிவித்துள்ளது.
    Next Story
    ×