என் மலர்

  செய்திகள்

  சாம்பியன்ஸ் தொடர் எங்களுக்கு மிகக் கடினமாக இருக்கும்: வங்காளதேச கேப்டன் சொல்கிறார்
  X

  சாம்பியன்ஸ் தொடர் எங்களுக்கு மிகக் கடினமாக இருக்கும்: வங்காளதேச கேப்டன் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்பியன்ஸ் டிராபி தொடர் எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று வங்காளதேச அணி கேப்டன் மோர்தசா கூறியுள்ளார்.
  சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. வங்காள தேசம் அணி 11 ஆண்டுகளுக்குப்பின் இந்த தொடரில் விளையாடுவதற்காக தகுதி பெற்றுள்ளது.

  இந்த தொடருக்குமுன் வங்காள தேச அணி, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணியுடன் இணைந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் முதன்முறையாக நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. இதன்மூலம் பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை பின்னுக்குத்தள்ளி ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் 6-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

  சாம்பியன்ஸ் டிராபியில் வங்காள தேச அணி இடம்பிடித்துள்ள ‘ஏ’ பிரிவில் பலமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் உள்ளன. இந்த மூன்று அணிகளில் இரண்டை வீழ்த்தினால்தான் அரையிறுதி வாய்ப்பை வங்காள தேச அணி தேடமுடியும். இது மிகமிக கடினம்.

  இந்நிலையில், இந்த தொடர் தங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று வங்காள தேச அணியின் கேப்டன் மோர்தசா கூறியுள்ளார்.

  இதுகுறித்து மேலும் மோர்தசா கூறுகையில் ‘‘தற்போது ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில் நாங்கள் 6-வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் அணி மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த நிலையில் மேலும் முன்னோக்கிச் செல்ல விரும்புகிறோம். உலகத்தில் எங்களால் முடியும் வரை செல்ல விரும்புகிறோம்.

  இந்த தொடர் எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. இங்கிலாந்து சூழ்நிலையில் எங்கள் பிரிவில் இடம்பிடித்துள்ள அணிகளை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், போட்டி நடைபெறும் அன்று எங்கள் நாளாக இருந்து, எங்களால் எதாவது செய்ய முடியும் என்றால், எங்களுடைய தரமான வீரர்களால் போட்டியை மாற்ற முடியும். இதற்கு முன் நாங்கள் விளையாடியதுபோல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
  Next Story
  ×