என் மலர்

  செய்திகள்

  அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்
  X

  அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வலம் 26-வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
  இபோக் :

  26-வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

  லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்த இந்திய அணி, அடுத்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.  இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்துடன் டிரா கண்டு இருந்தது.

  அடுத்த ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பந்தாடி இருந்தது. முன்னணி அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் நியூசிலாந்து-ஜப்பான், மலேசியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

  Next Story
  ×