என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மனதினை அமைதியாக்கும் மூச்சு பயிற்சி!
    X

    மனதினை அமைதியாக்கும் மூச்சு பயிற்சி!

    • மூச்சு உங்களின் உடல்நிலையினைக் காட்டும். மூச்சு ஆழ் மனதோடு சம்பந்தப்பட்டது.
    • நிதானமான ஆழ்மூச்சு மனதினை அமைதியாக வைக்கும்.

    மனசு சில நிகழ்வுகளால் ரொம்ப வலிக்குதா? ஆறாத புண்ணாக இருக்கின்றதா? குடி குடித்து அந்த வலியினை விழுங்க முடியாது. புகை பிடித்து அதனை ஊதி விட முடியாது. பட்டினி கிடந்து அந்த வலியினை சாக அடிக்க முடியாது. இந்த வேதனையை விட்டு ஓடி விட முடியாது. அமைதியாய் அமருங்கள். முடிந்த வரை உங்கள் மூச்சு ஓட்டத்தினை கவனியுங்கள். பழைய கார் ஸ்டார்ட் செய்வது போல் சத்தம் வேண்டாம். 'புஸ் புஸ்' என்று பாம்பு போல் மூச்சு விட வேண்டாம். மூச்சு இயல்பானதாக இருக்கட்டும். அமைதி மட்டுமே இங்கு அவசியம்.

    வலியும், வேதனையும் தானே மறைந்து விடும். இது பிரபஞ்ச ரகசியம் இந்த உலகில் ஒவ்வொரு ஜீவராசி வாழ்வதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. ஆறறிவு படைத்த மனிதனுக்கு இது கூடுதலாகவே இருக்கின்றது. அந்த காரணம், அந்த செயல் உங்களை புத்துயிர் கொள்ள செய்யும். அது என்ன என்பதனை உங்களால் உங்களுக்குள் தேடி கண்டுபிடிக்க முடியும். அதனுடன் ஒன்றி விடுங்கள். வாழ்வு சீராய் செல்லும்.

    தினமும் ஒரு பசுமையான மரத்தினையோ, செடியினையோ அல்லது ஆகாயத்தினையோ 5 நிமிடங்கள் அமைதியாய் சலனமின்றி பாருங்கள். மன அமைதி உங்களை ஆக்கிரமித்து விடும்.

    பொறுமையாய் உணவு உண்ணுங்கள். அவசரமும் ஆரவாரமும் வேண்டாம்.

    இவை அனைத்தும் உங்களுக்கு சுயகட்டுப்பாட்டினைத் தரும்.


    மூச்சின் அருமை தெரியுமா?

    மூச்சு என்பது உயிர் நிலைக்க மட்டும்தானா? அதற்கு மேலே பல அதிசயங்கள் இருக்கு.

    மூச்சு உங்களின் உடல்நிலையினைக் காட்டும். மூச்சு ஆழ் மனதோடு சம்பந்தப்பட்டது. நிதானமான ஆழ்ந்த அமைதியான மூச்சு உங்களை அமைதிப்படுத்தும். நரம்பு மண்டலம் கூட சீராகும் என்கின்றனர் யோகா பயிற்சியாளர்கள். இருதய படபடப்பு கட்டுப்படும். தசைகள், மனம் ரிலாக்சாக இருக்கும்.

    ஆழ்ந்து மூச்சு விடுதல், மூச்சு உங்களுள் உங்களை ஆழமாய் இணைக்கின்றது. தன்னைத் தானே வெறுத்து இருப்பவர்கள் தன் மீதும் அன்பு செலுத்த ஆரம்பிப்பார்கள். ஆழ்ந்த தூக்கம் இருக்கும். பழைய நினைவுகளில் சோகம் கொள்ளாமல், எதிர் காலத்தினைப் பற்றிய பயம் இல்லாமல் நிகழ் காலத்தில் அந்தந்த நொடியில் வாழ்ந்திடுவர். உடலில் சக்தி நிலை கூடும்.நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உயர் ரத்த அழுத்தம் நன்கு கட்டுப்படும்.

    மன அழுத்தம் இராது. நிதானமான ஆழ் மூச்சு படப்படப்பினை நீக்கி விடும். அதே போல் உயர் ரத்த அழுத்த அபாயத்தினைக் குறைக்கும்.

    நிதானமான ஆழ்மூச்சு மனதினை அமைதியாக வைக்கும். நிதானமான ஆழ்மூச்சு என்பது கவலை, கோபம், இருதய நோய், அஜீரணம், நரம்பு கோளாறு, தலைவலி இவைகளை நீக்க வல்லது.


    எதிர்மறை எண்ணங்கள், எரிச்சல், குற்ற உணர்வுகள் நீங்கும். இவற்றினை யோகா பயிற்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர் ஆனால் பயிற்சியாளரிடம் இதனை முறையாய் கற்காமல் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அநேகமான ஆபத்துக்களையும் ஏற்படுத்தலாம். இப்போதெல்லாம் 'ஆரோக்கிய வழி' என்ற பிரிவில் வலியுறுத்தப்படும் ஒன்று உடல் உறுப்புகளை 'Detox' செய்யுங்கள் என்பதுதான். அதாவது உடலின் நச்சுகளை நீக்குங்கள் என்பதாகும். இதற்கான காய்கறி, பழ-ஜூஸ்கள், மூலிகை சாறுகள் என பரிந்துரைக்கப்ப டுகின்றன. சில வகை காய்களும், பழங்களும் நமக்கு மிக எளிதாகக் கிடைக்கின்றன. அவைகளை பயன்படுத்தலாமே. ஆனால் பொதுவில் ஜூசை விட சமைத்து உண்பது நார்சத்து சேர உதவும். அவரவர் விருப்பப்படி செய்யலாம்.

    கல்லீரல்-பீட்ரூட், ரத்த விருத்தி-பூண்டு, பசலை, சிறுநீரகம்-தர்பூசணி, உணவு பாதை- தயிர், மோர், ஆளி விதை, சருமம்-க்ரீன்ட், சோற்று கற்றாழை, நிணநீர் மண்டலம்-எலுமிச்சை, குடல்-சியா விதைகள், பூசணி விதை, கணையம்-பட்டை (சிறிதளவே), மூளை- வால்நட், பிளாக்ஸ் விதை, ஒமேகா3, கண்கள்- காரட், தசைகள்- மக்னீசியம், வாழைப்பழம், மூட்டுகள்- மஞ்சள், ஓமோகா 3 இவற்றினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாமே. மேலும் ஆரஞ்சு பழம் என்பது ஏனோ சற்று பழக்கம் குறைவாகவே இருக்கின்றது. வைட்டமின் சி சத்து கொட்டி கிடப்பது. இதனையும் மிஞ்சும் நெல்லிக்கனி.

    கமலி ஸ்ரீபால்


    மாதுளை-ஜீரண சக்தி, இருதயத்திற்கு நல்லது பசித்த வயிறும், காலியான பர்சும், உடைந்த மனமும் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடங்களை கற்றுத் தந்து விடுகின்றது

    * மது, சோடா, அதிக காபி, டீ இல்லாது இருந்தாலே அன்றாடம் உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது போல் தானே.

    * துரித உணவு, சிப்ஸ், உறைந்த உணவு இவற்றை தவிர்த்தால் உடல் உறுப்புகள் உங்களுக்கு நன்றி சொல்லும்.

    * சர்க்கரை, பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் இவையெல்லாம் நம் கண்ணில் கூட படக்கூடாது.

    வாழ்வின் ஆரோக்கியமான பயணத்திற்கு:

    * பசலை கீரை, புரோகலி, முளை கட்டிய பயிறு, தக்காளி, வெள்ளரி, காலி பிளவர், காய்கறிகள்.

    பழங்கள்- ஆப்பிள், வைட்டமின் 'சி' சத்து நிறைந்த பழங்கள்-ஆரஞ்சு, செர்ரி.

    தானியங்கள்- பிரவுன் அரிசி, ஓட்ஸ், பார்லி, சிறுதானியங்கள், முழு தானியங்கள்.


    மேலும் முட்டை, மீன், பீன்ஸ், புரத உணவு, கொழுப்பில்லத பால், எண்ணை, பாதாம், முந்திரி, பிஸ்தா, பிளாக்ஸ்விதை, மீன் போன்றவை வெகுவாய் உதவும்.

    இதனையும் அறிவோம்- பச்சை கீரைகள், ஒமேகா 3, கொட்டை விதை வகைகள், மஞ்சள் இவை நரம்பு மண்டலத்தினை பலப்படுத்தும்.

    உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, தரமான, தேவையான தூக்கம், அதிக நேரம் கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் இல்லாமல் இருப்பதும் நரம்பு மண்டலத்திற்கு பலம் தரும்.

    முட்டை- பலமின்றி இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பப்பாயா- அஜீரணம் என அடிக்கடி சொல்பவர்கள் இப்பழத்தினை சேர்த்துக் கொள்ளலாம்.

    சளி பிடிச்சிருக்கா- இஞ்சி டீ சாப்பிடலாமே.

    பார்வை குறை உள்ளவர்கள்- கொடை மிளகாய் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

    முட்டி வலிக்கு- மஞ்சள் சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றதா- பூண்டு அன்றாடம் சேர்க்கலாம். உடையும் நகங்கள் இருந்தால், அன்றாடம் 5 பாதாம் பருப்பு ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

    சக்தி குறைவாக தோன்றுகின்றதா? சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாம். பெரிதும் உதவும்.

    நெஞ்சு எரிச்சலா? ஓட்ஸ் உணவு நன்கு உதவும். மலச்சிக்கலா- புரூன்ஸ் பழம் சாப்பிடலாமே. இது வாழ்வின் ஆரோக்கிய முறை.

    வாழ்வில் அதிக நன்மைகளைப் பெற எளிமையான வழிகள்

    வாழ்வில் ஏதேனும் ஒன்றுக்காக நீங்கள் மிகுந்த நன்றி உடையவராக இருக்கின்றேன் என்று ஒன்றினை யோசித்து ஒரு நோட்டு புத்தகத்தில் எழுத முற்படுங்கள். ப்பூ! இதென்ன பிரமாதம். ஒரு நொடியில் எழுதி விடுவேன் என்று மனது சொல்லுகின்றதா? சொல்லட்டும். ஒரு நோட்டு புத்தகமும், பேனாவும் எடுத்து அமருங்கள். எந்த ஒன்றினை எழுதுவது என்று மனம் திண்டாடி விடும்.

    நல்ல பெற்றோர், படிப்பு, வேலை, சம்பளம், பல பாதிப்புகளில் இருந்து மீண்டது என டிராபிக் ஜாம் போல் எண்ணங்கள் முட்டும். இதில் எந்த ஒன்றினை தேர்ந்தெடுப்பது? ஆக ஒவ்வொருவர் வாழ்விலும் அநேக நன்மைகள் இறைவனாலோ அல்லது யாரோ ஒருவராலோ நடந்திருகின்றன. அதனை நாம் நினைப்பதும் இல்லை. நன்றி கூறுவதும இல்லை. அன்றாடம் ஓரிரு நிமிடங்கள் நன்றி கூற என்று நேரம் கொடுங்களேன்.

    உங்கள் பழக்க, வழக்கங்களை முறைப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களை கம்பீரமான வராக ஆக்கி விடும்.

    நம் எண்ணங்களைப் பற்றி நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எண்ணங்களே உண்மையாக உருவாகி விடும். "நான் நன்றாக இருக்கிறேன்", "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்", "நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன்" என்ற நல்ல எண்ணங்கள் நம்மை அவ்வாறே மாற்றி விடும். உங்கள் உள்ளுணர்வு உங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் உங்களுக்கு உணர்த்தும். கண்டிப்பாய் கவனம் செலுத்துங்கள்.

    ஒருவரது செயல்களே சத்தமாக ஓலிக்கும். அவரது வார்த்தைகள் பலவீனமானவையே. பிறரிடம் பேசுவதும், பழகுவதும் அவருடைய வாழ்க்கையினை நாம் கையாள்வது போன்றது. தெரிந்தோ, தெரியாமலோ அவர்களது காயங்களை நாம் மிதித்து விடக்கூடாது.

    Next Story
    ×