என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தியானம் பழகுவோம்
    X

    தியானம் பழகுவோம்

    • விஞ்ஞான பைரவ தந்திரம் என்று ஒரு நூல் உள்ளது.
    • சில சிறிய முயற்சிகளை அன்றாடம் நாமே செய்யலாம்.

    தியானம் செய்யனும், ஆத்ம பலம் பெருகனும் இப்படி எல்லாம் ஆசை தான். ஆனால் எப்படி ஆரம்பிப்பது? எந்த பிரிவு முறையினை பின் பற்றுவது என்பது தான் குழப்பமாய் இருக்கின்றது என்பவர் அநேகர் உள்ளனர்.

    நீங்கள் பழக விரும்பினாலும் சரி, அறிய விரும்பினாலும் சரி தியான முறை எத்தனை பிரிவுகளில் உள்ளது என்பதை முதலில் பார்ப்போம். பொதுவில் உலகின் பல இடங்களில் புத்தர் அவர்களின் பிரிவுகளை பின்பற்றுதல் என்பது உள்ளது.

    நம் நாடு போன்ற தொன்மை பழக்கம் உள்ள இடங்களில் சித்தர் முறை பின்பற்றப்படுகிறது. இவற்றினை பின்பற்றுவோர் அவரவர் குழ்நிலைக்கு ஏற்ப கலாச்சார பிரிவு மற்றும் பயிற்சி பாடங்கள் மூலம் அறிகின்றனர். பயிற்சி செய்கின்றனர்.

    விஞ்ஞான பைரவ தந்திரம் என்று ஒரு நூல் உள்ளது. இதில் 112 தியான முறைகள் இடம் பெற்றுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிவபெருமான், பார்வதி தேவிக்கு கூறியதாக சொல்லப்படும் இந்நூல் 162 பாடல்களை கொண்டது.

    ஏவா-சப்தம், பைரவா சப்தம், ஒலியினைத் தாண்டி தந்த்ரா முறை என்ற பொருளில் தலைப்பினைக் கொண்டுள்ளது. பார்வதி அன்னையின் கேள்விகளுக்கு பதிலாக இந்நூல் சிவபெருமானால் கூறப்பட்டுள்ளது. இதில் மிக ஆழ்ந்த ரகசியங்களைக் கொண்ட ரேக சாஸ்த்திர முறைகள் உள்ளன. ஆனால் இவைகள் அனைத்தினையும் எளிதில் அறிந்து விட, முடியாது சில அடிப்படை பயிற்சிகளை கற்கவே குரு மிக அவசியம் ஆகின்றது.

    இதனைப் படித்தால் ஒருவர் ஆச்சரியம் கொள்வார். வாழ்வும், பிரபஞ்சமும் சாதாரண விஷயமல்ல என்பதனை புரிந்து கொள்வார். மீண்டும் நாம் நடைமுறை பழக்கத்தில் இருக்கும் சில தியான முறை பயிற்சிகளைப் பார்ப்போம். பொதுவில் ஆரம்ப நிலையில் சில மூச்சுப் பயிற்சிகளை செய்ய பழக்குவர். காலத்திற்கேற்றார் போல் நோமின்மை என்பது அநேகரின் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கேற்ப சரி செய்து மனிதன் எப்படியாவது யோகா, தியானம் இவற்றினால் அமைதி காண வேண்டும் என பயிற்றுவிப்போம்.

    * முதலில் ஒருவரின் மனநிலை அமைதியாய் இருக்க தியானம் எனும் தெளிவு நிலை பயிற்சியினை சொல்லிக் கொடுக்கின்றனர்.


    * யோகா பயிற்சி- இது உடல், மனம் இரண்டும் இணைந்த பயிற்சி. உடலின் சில அசைவுகள் அத்துடன் கூடிய மூச்சு இயக்கம். இதனை அசைவு தியானம் என்பர்.

    * நடை பயிற்சியில் தியானம்-நமது முழு கவனத்தினையும் அந்த நொடி, நிமிடத்தில் ஒவ்வொரு அடியின் மீதும் வைத்து முழு கவனம் செலுத்துவது.

    * உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் மீதும் கவனம் செலுத்துவது. இது ஆரம்ப நிலை கட்டத்தில் இருப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

    * மந்திரஜபம் செய்வது, பிறகு அந்த மந்திரமும் இல்லாத அமைதியாக இருப்பது.

    மூச்சினை கவனித்தல்:- இதில் பல கிளை பிரிவுகள் உள்ளன. இதனை மிகவும் பிரதானமானதாக கருதுவர்.

    * குண்டலினி பயிற்சி:- இதனை உங்கள் குரு அதிக கவனத்துடன் பயிற்சி செய்ய வைப்பார்.

    * Touchi- இது உடற்பயிற்சியுடன் கூடியதாக இருக்கின்றது.

    * தீப ஒளியின் முன்னால் தியான பயிற்சி

    இப்படி மூச்சு பயிற்சி, அசையா நிலை, அசையும் நிலை, இவற்றுடன் கூடிய பயிற்சி என்று இன்றைய இளைய சமுதாயத்தினருக்கும், பழைய முறைகளின் வேர்கள் மாறாமல் பயிற்சிகள் அளிக்கின்றனர். ஓம் (அ.உ.ம்) இதன் உச்சரிப்பிலேயே தியான முறை பயிற்ச்சிகள் உள்ளன.

    இம்முறையில் எந்த பிரிவோ, எந்த நாடோ தெரியாது. மனிதனை கடந்து தானே பிரபஞ்ச உணர்வாகி விடுவோம். அதனையும் தாண்டி செல்லும் வழியாகத் தான் இது அமைந்துள்ளது.

    சில சிறிய முயற்சிகளை அன்றாடம் நாமே செய்யலாம். பொதுவாக நாம் படித்தோம் அல்லவா. சிறிது நேரம் அமைதியாய் அமருங்கள். கண்கள் மென்மையாய் மூடி இருக்கட்டும். முதுகு நிமிர்ந்து இருக்கட்டும். டிவி, போன் எதுவும் அருகில் வேண்டாம். உடல் ஆடாது, அசையாது இருக்க வேண்டும். அதற்காக பயில்வான்கள் போல் உடலை முறுக்கி, இறுக்கி இருக்க வேண்டாம். உடல் தளர்த்தி இயல்பாய் இருக்கட்டும். எண்ணங்கள் வந்தால் விட்டு விடுங்கள். அதன் பின்னே செல்ல வேண்டாம். தினமும் இப்படி 20 நிமிடங்கள் இருந்து பழகுவோம். முதலில் 5 நிமிடத்தில் ஆரம்பித்து பின் மெதுவே அதிகரிப்போம். சரி இதற்கும் சில ஒழுக்க முறைகள் வேண்டுமே.

    கமலி ஸ்ரீபால்

    இதனை செய்ய தகுந்த இடத்தினை வீட்டினுள் தேர்வு செய்ய வேண்டும். சத்தம் இல்லாமல் இருப்பது நல்லது. தினமும் முடிந்தவரை அதே குறித்த நேரத்தில் செய்ய வேண்டும். நாற்காலியில் அமர்ந்தால் கால்கள் தரையில் பதிந்து இருக்க வேண்டும். சில அடிப்படைகளை நாம் அன்றாடம் வாழ்வில் பழக்கத்திற்கு கொண்டு வரும் பொழுது பயிற்சிகள் எளிதாய் இருக்கும்.

    தியானம் என்பதனை முறையான பயிற்சியாளர்கள், குருமார் மூலமாக அறிந்து பழகுவது மிக அவசியம். இல்லையெனில் தவறுகள் ஏற்படலாம். இதனால் மன நிலைகள் கூட பாதிக்கப்படலாம். கவனம் தேவை.

    மூச்சிற்கும் மனிதனுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது என்பதனை அனைவரும் அறிவோம். மனிதனுக்கும், இந்த பிரபஞ்ச சக்திக்கும் இருக்கும் தொடர்பு இந்த மூச்சில் தான் என்பது பலர் அறியாத ரகசியமாக இருக்கின்றது.

    கீழ்வரும் உரையாடல் ஒரு ஆசிரியருக்கும், மாணவருக்கும் நடந்த நிகழ்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாணவர் நம் நாட்டில் உயர்ந்த நிலையை அடைந்தவர் என்று பெயரை சொன்னார்கள். என்னால் அதனை உறுதி செய்ய முடியவில்லை. ஆயினும் இந்த உரையாடலை அனைவரும் படிக்க வேண்டும் என்ற ஒரு விருப்பத்தினால் எழுதப்பட்டுள்ளது.

    கடவுள் இருக்கிறாரா? என்பது தொடர்பாக ஒரு ஆசிரியருக்கும், மாணவருக்கும் நடந்த விவாதம். கடவுள் இல்லை என்ற கொள்கை கொண்ட ஒரு தத்துவ பேராசிரியர் வகுப்பில் ஒரு மாணவரை கேள்விகள் கேட்டார்.

    'நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா?' -ஆசிரியர்

    'நிச்சயமாக ஐயா'-மாணவர்

    'கடவுள் நல்லவரா?'

    'ஆம் ஐயா'

    'கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?'

    'ஆம்'

    'என்னுடைய சகோதரர் புற்று நோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னை காப்பாற்ற அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார்.'

    நாம் எல்லோருமே நோய் வாய்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்கின்றோம். ஆனால் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை. பின் எப்படி கடவுள் இருக்கின்றார் என்று சொல்கின்றாய்? - ஆசிரியரின் கேள்வி

    மாணவர் அமைதியாய் இருக்கிறார்.

    'உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா?'

    'சரி... நாம் மீண்டும் ஆரம்பிப்போம்.'

    'கடவுள் நல்லவரா?'

    'ஆம் ஐயா'

    'சாத்தான் நல்லவரா?'

    'இல்லை'

    'எல்லோரும் கடவுள் படைப்புதான் என்றால் சாத்தான் எங்கிருந்து வந்தார்?'

    'கடவுளிடம் இருந்துதான்'- மாணவர் பதில்

    'சரி இந்த உலகத்தில் கெட்டவைகள் இருக்கின்றனவா?'

    'ஆம்'

    'அப்படியென்றால் அவற்றை உருவாக்கியது யார்?'

    'மாணவர் பதில் சொல்லவில்லை'

    'இவ்வுலகில் பசி இருக்கின்றது. பஞ்சம் இருக்கின்றது. மூட நம்பிக்கைகள் எங்கிருந்து வந்தன?'

    (மாணவர் மவுனமாய் நிற்கிறார்)

    விஷயங்களை சரியாக புரிந்து கொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன என்று அறிவியல் சொல்கிறது. இப்போது சொல் கடவுளை கண்ணால் கண்டிருக்கிறாயா? அல்லது கடவுளின் வாசனையை நுகர்ந்திருக்கிறாயா? அவர் பேசுவதை கேட்டிருக்கிறாயா? வேறு எப்படித்தான் அவர் இருப்பை உணர்ந்திருக்கிறாய்?

    'மவுனம்'

    'ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய். அப்படித் தானே?'

    'ஆம் ஐயா?'

    'நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத் தக்க வாழ்க்கையிலும் சரி, ஆதாரங்களு டன் விளக்கக்கூடிய வழி முறைகளிலும் சரி. எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது கடவுள் இல்லை என்றும். இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்.

    'ஒன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது. -மாணவர்.

    'ம்ம்... நம்பிக்கை அதுதான் இப்ப பிரச்சினையே' என்று ஆசிரியர் பெருமூச்சு விடுகிறார்.

    (இப்போது மாணவர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

    'ஐயா. வெப்பம், குளிர் என்று உள்ளதா?'

    'நிச்சயமாக உள்ளது.'

    'குளிர் என்று ஒன்று உள்ளதா?'

    'நிச்சயமாக.'

    'இல்லை ஐயா குளிர் என்ற ஒன்று இல்லை. வெப்பம் என்ற ஒன்று ஆற்றல், குளிர் என்பது வெப்பத்திற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் எனும் ஆற்றல் இல்லாமையே குளிர் என்கிறோம்.

    அதேபோல் இருட்டு என்பதே வெளிச்சம் இல்லாமைதான். எதிலும் இரட்டை நிலைபாடு பார்க்கிறோம். ஒன்று இருந்தால் அதன் எதிரிடையான மற்றொன்று இருக்கின்றது என்பது உங்கள் வாதம்.

    அதேபோல் நல்ல கடவுள், கெட்ட கடவுள் என்ற ஒன்று இல்லை. எண்ணங்கள் உருவாகுவதே உடலினுள் கலக்கும் மின் மற்றும் காந்தத் தூண்டுதல்களால் தான். மின்சாரத்தை அளக்க முடிகின்றது. காந்தத் தன்மையை விவரிக்க முடிகின்றது. ஆனால் எண்ணங்களின் தோற்றத்தை அளக்க முடிவதில்லை.

    இறப்பு என்பது வாழ்வின் எதிர்பதம் அல்ல. வாழ்வு இனி இல்லை என்ற தன்மையானதாகும். பரிணாம வளர்ச்சியினை தத்தமது கண்களால் காண முடியவில்லை. இங்கு ஆசிரியரின் மூளையை யாரும் தொட்டுப் பார்த்ததில்லை. உணர்ந்ததில்லை. வாசனை நுகர்ந்ததில்லை. ஆனாலும் ஆசிரியருக்கு மூளை இருக்கின்றது என்று நம்பி நாம் படிக்கின்றோம்.

    அதுபோல் கடவுளையும் நம்பித்தான் ஆக வேண்டும். நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்று பதிலளித்தார் மாணவர்.

    மீண்டும் படிப்போம் சிந்திப்போம்.

    Next Story
    ×