என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

குழப்பங்கள் தீர சிந்திப்போமா?
- குலதெய்வ வழிபாட்டிற்கும், ஊர் திருவிழாவிற்கும் வெளிநாட்டில் இருந்தாலும் ஓடி வந்து விடுகின்றனர்.
- வாழ்க்கை முழுவதும் நாம் கற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும்.
என்னால் முடியவில்லை.... போராடத்தான் வேண்டும். எல்லோரும் ஒரு நிமிடம் நம் வாழ்க்கை முறை எப்படி இருக்கின்றது என்று சற்று சிந்தித்துப் பார்ப்போமா? நம் வாழ்க்கை முறை அநேகமாக அவரவர் குடும்ப வழக்கப்படி நம் வீட்டு பெரியோர்கள் கூறும் மத வழிபாட்டுப் படியும், சம்பிரதாயங்கள் படியும் அமைந்துள்ளது. அநேகர் அதனையே பின்பற்றுகின்றனர். குலதெய்வ வழிபாட்டிற்கும், ஊர் திருவிழாவிற்கும் வெளிநாட்டில் இருந்தாலும் ஓடி வந்து விடுகின்றனர். பைபிள், குரான், பகவத் கீதை என்ற பிரிவில் சிலர் தன்னம்பிக்கை கொண்டுள்ளனர். திருக்குறள் வழி என்ற பிரிவில் சிலர். பிரிவு எது என்பது முக்கியமல்ல. ஏனெனில் அனைத்துமே ஒழுக்கத்தினைப் பற்றி மட்டுமே கூறுகின்றன.
இவ்வகையில் ராமாயணம், மகாபாரதம் இரண்டுமே வாழ்வில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி கூறுகின்றன. அறிவியல் சார்ந்த புத்தகங்களும் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி கூறுகின்றன. இன்றைய கால மனிதன் அனைத்தினையும் படிக்க வேண்டும். பாரபட்சமின்றி படிக்க வேண்டும். பலமுறை படிக்க வேண்டும். அறிவினைத் தேட வேண்டும். அவ்வகையில் மகாபாரதம் என்று வரும்போது இது உண்மையாய் நிகழ்ந்ததா? கற்பனையா? என்ற வாதத்திற்கு யாருமே வர வேண்டாம்.
நமக்கு அது தேவையும் இல்லை. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அறிந்து கொள்வது என்பது ஒருவரின் வாய்ப்பு. ஏற்பதும், ஏற்காததும் தனி மனித விருப்பமே. ஆக இதில் கூறப்பட்டுள்ள சில நிகழ்வுகள் அது மனிதனுக்கு கற்பிக்கும் பாடங்கள் பற்றி பார்ப்போம். இது பலரின் கருத்துக்களை தொகுத்து எழுதப்பட்டுள்ளது. பாார்ப்போமா?
* வெறும் கருணை, எளிமை, தாராளமாய் அள்ளி வழங்கும் குணம், இருப்பது மட்டுமே ஒருவரது வாழ்வினை முழுமையாக்காது. திறமையும், வலிமையும் கண்டிப்பாய் அவசியம். இது இல்லையென்றால் அவரது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்?
* உண்மையான நட்பு என்பது ஒரு உயரத்தினைக் கொடுக்கும். துரியோதனன்-கர்ணன் நட்பு என்பது நன்மையா? தீமையா? என்ற வாக்குவாதம் இங்கு வேண்டாம். அது மிகப்பெரிய தலைப்பு. ஆனால் இருவருக்கும் ஏற்றத்தினை வாழ்வில் அளித்தது. பாண்டவர்களுக்கு கிருஷ்ணரின் நட்பு முதுகெலும்பாய் உதவியது.
* கெட்டவர் சகவாசம் ஒருவரை அதள பாதாளத்தில் தள்ளி விடும். சகுனி மாமா ஒருவரே இதற்கு சிறந்த உதாரணம். அவரின் செயல்களுக்கு அவரின் மனவேதனைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் தீர்வு என்பதனை பகை, அழிவு இவற்றின் மூலம் காண்பது நினைத்துப் பார்க்க முடியாத பாதகங்களை ஏற்படுத்தும். துரியோதனன், சகுனி உறவும், நட்புமே இதற்கு உதாரணம் ஆகும்.
* மிக அதிக குழந்தைகள் இருந்தால் தலைவலிதான். இந்த காலத்தில் இரண்டு குழந்தைகளை கூட சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் திண்டாடுகின்றனர்.
* வீட்டு வேலைகள் அனைத்தினையும் அனைவரும் கற்க வேண்டும். பாண்டவர்களின் வனவாசம் காட்டும் பல உண்மைகளில் இதுவும் ஒன்று.
* அதிக உணர்ச்சி வசப்படுதல் தீங்கினையே விளைவிக்கின்றது. திருதிராஷ்டிரரின் அன்பு- அதாவது திருதிராஷ்டிரன் அவர் மகன் துரியோதனன் மீது கொண்ட அன்பு கண்மூடித்தனமானது. காட்டாற்று வெள்ளம் போன்றது. துரியோதனன் கெட்ட குணம் கொண்டவாராய் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கண் மூடித்தனமான அன்பினையே கொட்டுகின்றனர். பின் அவதியுறுகின்றனர். இனியாவது அவர்கள் மாற வேண்டும்.
* நம் உடமைகள், உரிமைகளுக்காக நாம் போராடத்தான் வேண்டும்.
* வாழ்க்கை முழுவதும் நாம் கற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும். அர்ஜுனன் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒன்றினை கற்றுக் கொண்டேதான் இருந்தான். அரை குறையாய் அறிவது மிக ஆபத்தானது. அபிமன்யு இதற்கு சிறந்த உதாரணம்.
ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம் அம்மனுக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும்.
உத்தராயண காலம் சிவனை வழிபட உகந்த காலம் என்றால் தட்சிணாயன காலம் அவரோடு சக்தியின் சொரூபமாக வீற்றிருக்கும் அம்பாளை வழிபட உகந்த காலம் ஆகும்.
ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். நம்முடைய மானிட வழக்கமான தாய்மை கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல, கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டுகளித்திடும் நாள் ஆடிப்பூரம். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஆடி சந்திரனுக்குரிய மாதம் மகாலட்சுமிக்குரிய நட்சத்திரம். மகாலட்சுமியும், சந்திரனும் பாற்கடலில் தோன்றியவர்கள் என்பதால் சகோதரிகள். எல்லாப் பெருமாள் கோவில்களிலும் ஆடிப்பூரம்களை கட்டும்.
இந்த அற்புத திருநாளில் ஏழை, எளிய சுமங்கலிப் பெண்களுக்கு புடவை குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பதும் உண்டு. அம்மன் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ள பெண்கள், தங்களின் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல் பூக்கள் படைத்து வணங்கலாம். இளம் பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், கூழ் ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.
சென்னையில் சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை அனைத்திலும் அம்மனுக்கு வளையல் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.
பற்றுதல் மனிதனின் கண்ணை மறைத்துவிடும். தவறுகள் நிகழ காரணம் ஆகிவிடும். சில சுகங்களை தியாகம் செய்தாலே வாழ்வில் முன்னேற்றம் பெற முடியும். அதிக தூக்கம், அளவற்ற உணவு, சோம்பல் இவற்றையாவது நாம் தியாகம் செய்யலாமே.
(சில சுய முன்னேற்றத்திற்கான வழிகளை, வாழ்வின் படிப்பினைகளை பகவத் கீதையின் மூலமாக மனிதன் பெறும் பாடங்களை பார்ப்போமா).
* கடமையை செய்: ஆனால் அதில் வரும் எந்த பலனிலும் மனதினை ஈடுபடுத்தாதே. இவ்வரிகள் படிக்க எளிதாகத்தான் இருக்கின்றது. ஆனால் பின்பற்றுவது மிக கடினமான ஒன்று. அதற்கு மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவப்பட்டால் வாழ்க்கை மிக எளிதாகி விடுமே.
* எல்லா நிகழ்வுகளும் காரண காரியத்தோடே நடக்கின்றன.
நம் எண்ணங்களில் சில நிகழ்வுகள் சரி எனத் தோன்றலாம். தவறு எனத் தோன்றலாம். சில நிகழ்வுகளால் மனம் பதறலாம். எல்லாமே ஒரு காரண காரியமாக இயற்கை நிகழ்த்துகின்றது என்று புரிந்து கொண்டால் மனம் தெளிவு பெறும்.
* இந்த நொடி, இந்த நிமிடத்தில் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
பல நேரங்களில் மனிதனுக்கு சவாலான குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படலாம். நிலை குலைய வைக்கலாம். அந்த நேரத்திலும் அந்த நொடியில் நாம் என்ன செய்ய வேண்டுமோ அதனை முழு கவனத்துடன் செய்வதே நன்மை பயக்கும்.
* தியாகம் செய்ய வேண்டும்.
சுகங்களை தியாகம் செய்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். மேலும் கோபம், ஆணவம், பொறாமை இவைகளைக் கூட தியாகம் செய்து விடலாமே.
* எளிமையாய் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
எளிமையான வாழ்க்கை மனிதனை வாழ்வில் உயர்த்தும். புராதன பரமாத்மாவே யுத்தத்தில் தேரோட்டியாக இருக்கவில்லையா.
* எந்த வேலையும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ அல்ல.
உழைத்து வாழும் எந்த வேலையும் உயர்வானதே.
* நல்ல நண்பர்களே வாழ்வின் பொக்கிஷம்.
குசேலர்-கிருஷ்ணர் நட்பினை விட சிறந்த உதாரணம் கூற முடியுமா என்ன?
பல காலங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட மகாபாரதத்தில் காலத்திற்கேற்ப சில இடைசெருகல்கள் இருக்கலாம். சில சம்பவங்கள் மிகைபடுத்தப்பட்டு இருக்கலாம். வாழ்க்கை என்பது பூவிரித்த பாதை அல்ல. கடுமையாகத் தான் இருக்கும். 'மறப்போம், மன்னிப்போம்' என்பது தேவ வாக்குதான். பிறருக்கு உதவி செய்வது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் கிடைத்த அரிய பொக்கிஷம். எல்லா செயல்களுக்கும் எதிர் விளைவு உண்டு. அன்பு, உதவுவது, ஆக்கப்பூர்வம். இவைகளைக் கொண்டு ஒருவர் வாழ்ந்தால் அதன் எதிர் விளைவும் அவ்வாறே இருக்கும். 'எண்ணங்களை பிறர்மீது செலுத்துவது 'பூமராங்' போல திரும்ப அனுப்பு பவர் இடமே வரும்.' இதனை கருத்தில் கொண்டு வாழ்ந்தால் வாழ்பவருக்கும் அவரால் சமுதாயத்திற்கும் நன்மையே ஏற்படும்.செய்வோமா!






