என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அலர்ஜியால் வரும் பிரச்சினைகள்
- மருத்துவர் ஆலோசனைப் படியான சிகிச்சை மிகவும் அவசியம்.
- உணவு, சோப்பு போன்றவற்றில் அலர்ஜி இருந்தால் அனை தவிர்த்து விட வேண்டும்.
எக்ஸிமா: இது ஒரு சரும பாதிப்பு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அநேகருக்கு இந்த பாதிப்பு காணப்படுகின்றது. வறண்ட, தடித்த சருமம், சிகப்பு, திட்டு, வீக்கம், அதிக அரிப்பு என்ற வெளிப்பாடுகள் இருக்கும். சொரிந்தால் பெரிதாகி விடும். கை, பாதம், முகம், கால், முழங்கால் மடிப்பு, கை முட்டி போன்ற இடங்களில் பொதுவாய் காணப்படும்.
சொரி போன்று இருக்கும். அதில் சில கொப்பளங்கள் வெடித்து கசிவு ஏற்படும். சிறு பாதிப்பு பெரிதாகும். ஒரு வாரத்தில் ஆறும். பின் மறுபடி பெரிய பாதிப்பாக மீண்டும் ஏற்படும். இப்படி தொடர் பாதிப்பாக இருக்கும்.
இந்த பாதிப்பின் முழு காரணத்தினை விளக்க முடியவில்லை என்றாலும் ஒன்று ஆய்வின் மூலம் உறுதியாகக் கூறப்படுகின்றது. ஒருவரின் நோய் எதிர்ப்பு திறன் அதிக கூடுதல் திறனோடு இருக்கும் போது சருமத்திற்கு ஏற்படும் எந்த பாதிப்பினையும் மிக அதிக வேகமாக, கூடுதல் திறனோடு எதிர்க்கின்றது. சோப்பு, பாத்திரம் மற்றும் துணி துவைக்கும் சோப்பு பிரிவுகள், சில வகை துணிகள், அதிக சூடு, அதிக குளிர் மற்றும் அலர்ஜி போன்றவை சரும பாதிப்பு தருவன ஆகும். அதிக அளவு ஸ்ட்ரெஸ், கவலை என்றிருந்தாலும் எக்ஸிமா பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதற்கான மருத்துவ சிகிச்சைகள் இன்றைய காலத்தில் நிறைய உள்ளன. அதிக காலம் இந்த மருந்துகளை உபயோகிக்கும் போது அதன் காரணமாக சில பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
மருத்துவர் ஆலோசனைப் படியான சிகிச்சை மிகவும் அவசியம்.
அதோடு நாமும் சில வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும்.
* உணவு, சோப்பு போன்றவற்றில் அலர்ஜி இருந்தால் அனை தவிர்த்து விட வேண்டும். சிலர் அலர்ஜி, இருப்பதனை கூட சரியாக உணர மாட்டார்கள். பொதுவில் எக்ஸிமா பாதிப்பு இருப்பவர்கள் சோயா, பால்-பால் சார்ந்த பொருட்கள் வேர்கடலை, மீன், முட்டை, செயற்கை நிறம் சேர்த்த உணவுகள் இவைகளை ஒவ்வொன்றாக தவிர்த்துப் பார்க்கலாம்.
* சமீபத்திய ஆன்டிபயாடிக் மருந்து, உணவு ஒவ்வாமை Lood Paiing, தொடர் ஜீரண மண்டல பாதிப்பு போன்றவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகம் அழித்து கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரிக்க காரணம் ஆகின்றன. இதுவும் எக்ஸிமா பாதிப்பு அதிகரிக்க ஒரு காரணம் ஆகின்றது.
பிளாக்ஸ் விதைகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஓமேகா-3 நன்கு உதவும். எதனையும் மருத்துவர் ஆலோசனையுடன் செய்யும் போது நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வெறும் வயிற்றில்- அதாவது வயிறு காலியாக இருக்கும் போது சிலவற்றினைத் தவிர்க்க வேண்டும்.
கமலி ஸ்ரீபால்
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ நம் உடலை பாதிக்கச் செய்யும். அதுவும் வயிறு காலியாக இருக்கும் போது ஒருவரின் நிலையே வேறாகத்தான் இருக்கும். அதனால்தான் பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்கின்றனர். சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ காலி வயிற்றில் நாம் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் உள்ளன.
சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து மற்றும் வெறும் வயிற்றில் ஆன்ட்ரிக், ஜீரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரும் இதனை அறிவுறுத்துவார். ஆனால் சிலர் மறந்து விட்டேன் என்று சொல்லி மனம் போன போக்கில் இவைகளை எடுத்துக் கொள்வது குடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
காலையில் எழுந்தவுடன் காபி பருகினால் பலருக்கு சரியாக இருக்கும். இது அதிக ஆசிட் பாதிப்பு, நெஞ்செரிச்சல், உடல் பிரச்சினை என்று கொண்டு விட்டு விடும். அதுவும் பால் இல்லாத சிக்கரி கலந்த கருப்பு காபி கூடுதல் பாதிப்பினை ஏற்படுத்தும். சிலர் காலை உணவினை தவிர்த்து காபியுடனே மதியம் வரை வேலையில் மூழ்குவார்கள். இது நிரந்தர ஜீரண மண்டல பாதிப்பினை ஏற்படுத்தும்.
* பசியுடன் இருக்கும் பொழுதும், காலி வயிற்றிலும் மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்து அதிகம். வெறும் வயிற்றில் இவை வேகமாக உறிஞ்சப்படுவதால் குடல் பாதிப்பினை பற்றி சொல்லாமலே அனைவரும் அறிவர்.
* காலையில் எழுந்தவுடன் சிலர் சூயிங்கம் மெல்லும் பழக்கம் உண்டு. இதனால் வயிறு வீக்கம் என்ற பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடும்.
* இரவு உணவை ரொம்ப காலம் தாழ்த்தி உண்ணவும் கூடாது. அதற்காக இரவு உணவினை தவிர்க்கவும் கூடாது. இரவு 7 அல்லது 8 மணிக்கு எளிதாய் செரிக்க கூடிய உணவினை உட்கொள்ள வேண்டும்.
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் போது நிறைய கலோரி சத்துக்களை எரிப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆய்வுகள் கூறுவது சக்தி இல்லாத காரணத்தினால் இவர்கள் தசை தொய்வினை அடைகின்றனர். மேலும் அதிக ஆசிட் சுரப்பதும் ஜீரண மண்டலத்தினை பாதிக்கின்றது. எனவே ஒவ்வொருவரும் அவரவர் வயதில் செய்யும் உடற்பயிற்சிக்கு ஏற்ற முறையினை பயிற்சியாளர் அறிவுரை படியே செய்ய வேண்டும். வயிறு முட்ட சாப்பிட்டு விட்டும் உடற்பயிற்சி செய்யக் கூடாது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
* வெறும் வயிற்றோடு வேலைக்கோ, கடைக்கோ சென்றால் பசிக்கும் நேரத்தில் முறையற்ற உணவினை கூடுதலாக சாப்பிட்டு விடுவோம். எடை கூடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
* வெறும் வயிற்றில் புளிப்பு பழ ஜூசினை அப்படியே அருந்தக் கூடாது. இவற்றுடன் தண்ணீர் கலந்து பருகலாம். இல்லையெனில் வயிறு வீக்கம் ஏற்படும்.
* வயிறு காலியாய் இருக்கும் போது எந்தவித வாக்குவாதமும் வேண்டாம். இந்த நேரத்தில் நமக்கு வார்த்தைகளில் கட்டுப்பாடு இருக்காது. வெது வெதுப்பாக ஏதாவது அருந்தி விட்டு அல்லது உண்டு விட்டு எதிராளிக்கும் அதனை கொடுத்து பின் பிரச்சினைகளை அலசுவது சுமூகமாய் முடியும்.
ஆனால் விரதம் போன்ற செயல்களில் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது மூளை விழிப்புணர்வோடு இருக்கும். ஆனால் அதனை தியானம், வழிபாடு இவற்றில் ஈடுபடுத்திக் கொள்வது ஆத்ம பலத்தினைக் கூட்டும்.
உறவுகள், உத்யோகம் போன்ற இடங்களில் இது சிறப்பாய் இருக்காது.
இரவு தூக்கம் என்று சொல்லும் பொழுது தூக்கமின்மைக்கு பல காரணங்கள் இருப்பதால் அதனையும் கண்டறிந்து சரி செய்து கொள்ள வேண்டும். சிலர் அடிக்கடி கூறும் ஒரு காரணம். இரவில் ஏற்படும் கால் பிடிப்பு, இது தொடை, ஆடு தசை பாதம் இவற்றில் ஏற்படுவது.
இந்த வலி தூக்கத்தில் திடீரென ஏற்படும். வலி பொறுக்க முடியாது. தசை இறுக்கம் இருக்கும். சில நிமிடங்கள் பொறுத்து இயல்புநிலை வரும். இதன் காரணங்களாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுவது:-
* குறைந்த உஷ்ண சூழ்நிலையில் அதிக நேரம் இருப்பது.
* ரத்த ஓட்டம் சீராய் இல்லாது இருத்தல்.
* தைராய்டு பிரச்சினை.
* உடலில் நீர் சத்து வற்றி இருத்தல்.
* சிறுநீரக பிரச்சினை.
* அதிக உடல் உழைப்பு (அ) உடற்பயிற்சி.
* உடல் உழைப்பு இன்மை, உடற்பயிற்சி இன்மை.
* கால்ஷியம் சத்து குறைபாடு.
* பொட்டாசியம் சத்து குறைபாடு.
* கர்ப்ப காலம்.
*மக்னிசிய சத்து குறைபாடு ஆகியவை காரணமாக இருக்கலாம்.
மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். அந்த அறிவுரைபடியே சத்து மாத்திரைகளோ (அ) சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டும்.
* எந்நேரமும் மனதிற்கு, எண்ணத்திற்கு மசாலா சேர்த்த செய்திகளை பரபரப்பிற்காக, ஊர் வம்பு என்ற பெயரில் அசை போடுவதற்காக பார்க்காதீர்கள்.
* இவை மனதில் அழிவுப் பூர்வமான தாக்குதல்களை ஏற்படுத்தும்.
* நாம் செய்யும் முறையான வேலையில் இருந்து மனதினை திசை திருப்பும்.
* நம் வாயின் மீது நமக்கு கட்டுப்பாடு இருக்காது. மேற்கூறியவை தொடர்ந்து சீரியல் பார்ப்பவர்கள், செல்போனில் மூழ்குபவர்கள் இவர்களுக்கும் பொருந்தும்.
* யாரும் முழுமையான அறிவு செரிந்த மனிதர்களாக பிறப்பதில்லை. (ஞானிகள், மகான்களை இதில் சேர்க்க வேண்டாம்.) சாதாரண மனிதன் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு கல்வி அறிவு, அனுபவ அறிவு பெற்றே முழுமை அடைகின்றன. இந்த பாதையில் சில தோல்விகள் ஏற்படலாம். அதனை மிதித்து மேலே சென்றாலே முன்னேற முடியும்.
*கடுமையாக உழைப்பதோடு, திறமையாகவும் உழைக்க வேண்டும்.
* வாழ்க்கையினை நாம்தான் உருவாக்கி கொள்ள வேண்டும்.
* எப்பொழுதுமே மறுநாள் வேலையினை முதல் நாள் இரவே குறிப்பெடுத்து, தேவையான ஆடை, பொருட்களை ரெடி செய்து வைப்பவர்கள் மறுநாள் நிறைய சாதனைகளை செய்ய முடியும்.
*சிலர் 5 நிமிடம் மட்டுமே ஆகக் கூடிய வேலையினை நாள் முழுவதும் ஒத்திப் போடுவார்கள். இதுவே அதிக ஸ்ட்ரெஸ் ஆகும். சிலர் பல் தேய்ப்பது, தலை வாருவது, குளிப்பது இதனைக் கூட நாள் முழுக்க ஒத்திப் போடுவர்.
* கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தியானம் செய்ய வேண்டும். இது உங்களது அன்றாட தவம் ஆகட்டும். வாழ்க்கை மிகவும் மேம்படும்.
*ஓய்வு என்பது மிக அவசியம். கண் விழித்து, உடல் வருத்தி அன்றாடம் செய்யும் வேலை குடி, புகை பழக்கம் போல் உடலை கெடுக்கும் என்பதனை உணர வேண்டும்.






